இந்தியா - அமெரிக்கா நட்பு பார்லி.,யில் ஜெய்சங்கர் பதில்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:''பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்வதிலும், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான பரஸ்பர மரியாதையை உறுதி செய்வதிலும், இந்தியா - அமெரிக்கா ஒன்றுபட்டுள்ளன,'' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.பிரச்னைடில்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கெனை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று
இந்தியா , அமெரிக்கா நட்பு ,பார்லி.,ஜெய்சங்கர் பதில்

புதுடில்லி:''பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்வதிலும், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான பரஸ்பர மரியாதையை உறுதி செய்வதிலும், இந்தியா - அமெரிக்கா ஒன்றுபட்டுள்ளன,'' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


பிரச்னை

டில்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கெனை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்தோ - பசிபிக் பாதுகாப்பு, கொரோனா நிலவரம் மற்றும் பொருளாதார சீரமைப்பு, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு நிலைமை உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்நிலையில், ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்குபதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:இந்தியா- - அமெரிக்கா இடையிலான உறவு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் மற்றும் தொற்று நோய்கள் போன்ற சமகால பிரச்னைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் உறுதி எடுத்து உள்ளன.


ஒத்துழைப்பு

சர்வதேச அளவிலான பயங்கரவாத அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள, இந்தியா - அமெரிக்கா ஒற்றுமையாக நிற்கின்றன. பயங்கரவாத குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை தடுப்பது, பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றில் இந்தியா - அமெரிக்கா இணைந்து பணியாற்றுகின்றன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது.இரு நாடுகளுக்கு இடையே உறுதியான உறவும், ஒத்துழைப்பும் வலுவான நிலையில் உள்ளன. வரும் நாட்களில் இந்த உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைமைகளும் உறுதியுடன் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
30-ஜூலை-202120:35:22 IST Report Abuse
RajanRajan இங்கத்த லோக்கல் உள்ளூர் ஸ்லீப்பர் செல் மற்றும் சீன ஒப்பந்ததார இத்தாலி கூட்டத்தையும் கம்யூனிஸ்ட் உண்டியல் குலுக்கிகளையும் இவர் அளிக்கும் பதில் எனிமா கொடுத்த மாதிரி இருக்குமே இப்போ.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202108:21:10 IST Report Abuse
Kasimani Baskaran இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவின் பலத்தை அதிகரிப்பவை. நாட்டின் பாதுக்காப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பாஜக அரசை பாராட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X