அரசியல் செய்தி

தமிழ்நாடு

மரியாதை தராத கலெக்டர் : எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
கோவை : இருக்கையில் அமர்ந்தபடி, கோவை கலெக்டர் மனு வாங்கியதால், 'அப்செட்' ஆன அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டோர், நேற்று கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.வேலுமணி மனு கொடுக்க அருகில் சென்றார். கலெக்டர் சமீரன் அமர்ந்து கொண்டே மனுவை பெற தயாரானார். இதை
கோவை, கலெக்டருக்கு, அ.தி.மு.க.,வினர், மிரட்டல் வைரலாகும் ,வீடியோ

கோவை : இருக்கையில் அமர்ந்தபடி, கோவை கலெக்டர் மனு வாங்கியதால், 'அப்செட்' ஆன அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டோர், நேற்று கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

வேலுமணி மனு கொடுக்க அருகில் சென்றார். கலெக்டர் சமீரன் அமர்ந்து கொண்டே மனுவை பெற தயாரானார். இதை கவனித்த மற்ற எம்.எல்.ஏ.,க்கள், 'ஏன் எழுந்து நின்று வாங்க மாட்டீர்களா' எனக் கேட்டனர். சுதாரித்த கலெக்டர்எழுந்து, மனுவை வாங்கினார். அதற்குள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து கொந்தளித்தனர். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், ''இது மிகவும் தவறு சார். நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன்,'' என கலெக்டரை பார்த்து கூறினார்.


latest tamil news




மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ''என்ன பழக்கம் இது, புதுப் பழக்கமா இருக்குது,'' என, கோபத்துடன் கூறினார். 'தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு விழாக்களுக்கு எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-202109:43:32 IST Report Abuse
Rasheel கலெக்டர் 25 வருஷம் படித்திருக்கிறார். ஆனால் நீ 3ம் கிளாஸ் தாண்டவில்லை என்று பொது ஜனம் சொல்கிறது.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-ஜூலை-202113:28:27 IST Report Abuse
raja நியூஸ் வந்திடிச்சில்ல ... அது தான் இந்த IAS க்கு வேண்டும்... பாருங்கள் சில மாதங்களுக்கு பிறகு இவருக்கு இதைவிட உயர்ந்த பதவியில் இடமாற்றம் வரும்.... கழக ஆட்சியின் அரிச்சுவடியை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.....
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
30-ஜூலை-202113:15:31 IST Report Abuse
Sathish மலையாளிகளின் பழக்கம் இது. கேரளாவுல வாழ்ந்ததனால சொல்றேன் அவங்க இப்படித்தான்.
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
31-ஜூலை-202110:31:04 IST Report Abuse
R MURALIDHARANநான் ஒரு முறை மில்லுக்கு சென்று இருந்தேன். அந்த மில்லின் நிர்வாக இயக்குனரின் அறையில் அவருக்கு எதிரில் அமர்ந்து இருந்தபோது, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் சாதாரணமாக வந்து முதலாளியிடம் பேசுவதை பார்த்தபோது ஆச்சர்யம் அடைத்தேன். அதுவே கோவையில் முதலாளியின் அறைக்கு செல்வதற்கு முன்பு செருப்பை கூட வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்று பவ்யமாக நிற்க வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட் மனப்பான்மை அதிகம் உள்ளதால் அனைவரும் சமம். ஆனால் தமிழகத்தில் அம்மா ஆட்சியானாலும் சரி அய்யா ஆட்சியானாலும் சரி அவர்கள் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X