பொது செய்தி

இந்தியா

மான் 'வீடியோ' பிரதமர் நெகிழ்ச்சி

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பவ்நகர்:குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் 3,000த்துக்கும் மேற்பட்ட மான்கள் துள்ளிக் குதித்தபடி சாலையை கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த 'வீடியோ'வை தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் வெலவதார் என்ற இடத்தில் மான்களுக்கான தேசிய பூங்கா உள்ளது.
 மான் 'வீடியோ' பிரதமர் நெகிழ்ச்சி

பவ்நகர்:குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் 3,000த்துக்கும் மேற்பட்ட மான்கள் துள்ளிக் குதித்தபடி சாலையை கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த 'வீடியோ'வை தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் வெலவதார் என்ற இடத்தில் மான்களுக்கான தேசிய பூங்கா உள்ளது. சமீபத்தில் காவலர் ஒருவர் இரவுப் பணி முடிந்து அதிகாலையில் பூங்கா வழியாக வீடு திரும்பினார். அப்போது 3000த்துக்கும் மேற்பட்ட மான்கள் சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு துள்ளிக் குதித்தபடி கடந்தன.

இந்த அற்புதமான காட்சியை தன் மொபைல் போனில் அவர் படம் பிடித்தார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை ஏராளமானோர் ரசித்துள்ளனர். அந்த வீடியோவை மிகவும் ரசித்த பிரதமர் நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து, 'அற்புதம்' என பாராட்டியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கிடைத்ததை உண்டு... வீதியில் உறங்கி... கண்கள் கிறங்கி செய்தி வேறுபக்கம் நான் சொன்ன கருத்து சரிதான் போல
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் பிரதமர் மாதிரி பிரியா இதெல்லாம் ரசித்துக் கொண்டு பொழுதைக் கழிக்க முடியாமல் ஒரு வேளை உணவுக்கே மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் உழன்று கொண்டுள்ள இந்தியர்கள் பல கோடி
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-202119:15:29 IST Report Abuse
Rasheelஅவர் உங்கள் ஆட்கள் போல பல லக்ஷம் கோடி கொள்ளை அடித்தால் நீ அவர் புகழ் பாடுவாயா?...
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202115:49:18 IST Report Abuse
vpurushothaman வேகமாகச் செல்லும் சீமான்கள் சாலையைக் கடக்கும் மான்களிடம் கருணை காட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X