மான் வீடியோ பிரதமர் நெகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மான் 'வீடியோ' பிரதமர் நெகிழ்ச்சி

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (6)
Share
பவ்நகர்:குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் 3,000த்துக்கும் மேற்பட்ட மான்கள் துள்ளிக் குதித்தபடி சாலையை கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த 'வீடியோ'வை தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் வெலவதார் என்ற இடத்தில் மான்களுக்கான தேசிய பூங்கா உள்ளது.
 மான் 'வீடியோ' பிரதமர் நெகிழ்ச்சி

பவ்நகர்:குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் 3,000த்துக்கும் மேற்பட்ட மான்கள் துள்ளிக் குதித்தபடி சாலையை கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த 'வீடியோ'வை தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் வெலவதார் என்ற இடத்தில் மான்களுக்கான தேசிய பூங்கா உள்ளது. சமீபத்தில் காவலர் ஒருவர் இரவுப் பணி முடிந்து அதிகாலையில் பூங்கா வழியாக வீடு திரும்பினார். அப்போது 3000த்துக்கும் மேற்பட்ட மான்கள் சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு துள்ளிக் குதித்தபடி கடந்தன.

இந்த அற்புதமான காட்சியை தன் மொபைல் போனில் அவர் படம் பிடித்தார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை ஏராளமானோர் ரசித்துள்ளனர். அந்த வீடியோவை மிகவும் ரசித்த பிரதமர் நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து, 'அற்புதம்' என பாராட்டியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X