தமிழ்நாடு

'குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும்'

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
செங்கல்பட்டு: ''குற்றங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் துறையாக இல்லாமல், குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் உள்ளது.இங்கு, 86 துணை காவல் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. காவல்துறை
குற்றங்கள், தடுப்பு, துறை,   காவல்துறை,

செங்கல்பட்டு: ''குற்றங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் துறையாக இல்லாமல், குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் உள்ளது.இங்கு, 86 துணை காவல் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வரவேற்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்ற துணை கண்காணிப்பாளர்களுக்கு, தங்கம், வெள்ளி பதக்கங்களை வழங்கி பேசியதாவது: காவல் உயர் பயிற்சியகத்தில், 86 பேர், புதிய துணை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சியை முடித்துள்ளீர்கள். துப்பாக்கி சுடுதல், சைபர் குற்றங்கள் தொடர்பான கணினி பயிற்சி, தடயவியல் பயிற்சி, போக்குவரத்தை திட்டமிட்டு நிர்வகிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன. இத்திறமைகளை வைத்து, மக்களை காக்கும் மகத்தான பணிக்கு, உங்களை ஒப்படைத்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு முன்னுதாரணமாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு இருக்கிறார். 1987ல், கோபிச்செட்டிபாளையத்தில், உதவி கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்து, தமிழகத்தின் காவல் துறை தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்.

எந்த நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக அமைகிறதோ, அங்கு தொழில் சிறக்கும்; முதலீடுகள் பெருகும். மனிதர்கள் அச்சமற்று, தங்களது உழைப்பைச் செலுத்துவர். குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தரும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும்.

ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகத்துக்கு, இன்று நான் அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இன்றைக்கு இது, மிக மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. தொழில்நுட்பம் வளர வளர, அதை குற்றம் செய்வோர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள், எத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கி, சைபர் குற்றத்தை தடுக்கின்றன என்பதை அறிந்து, நம் காவல் துறையையும் நவீனமயமாக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஜூலை-202123:03:08 IST Report Abuse
Mohan ஆமா, இருக்க வேண்டும். ஆனா...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-ஜூலை-202120:41:26 IST Report Abuse
RajanRajan இங்கே போலீசையே ரோட்டுலே விட்டு ஆணும் பெண்ணுமா விளாசுரங்க. இதுலே போயி என்ன ஒரு திராவிட நன்னூல் வாசிப்பு பாருடா. குற்றங்கள் குறைய முதலில் உங்க டாஸ்மாக் வியாபாரிகளை முடக்கு. அப்புறம் தானா எல்லாம் வழிக்கு வருவானுங்க தத்திகள். இந்த கரைவேட்டி உ.பி ஸ் கள் தான் விட்டு கலாய்க்கிறானுங்க மாபியா கூட்டமா.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூலை-202113:14:16 IST Report Abuse
 rajan ஊஹும் ..... பொய் வழக்கு போடும் துறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X