எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை நூற்றாண்டு விழா சரியா? : மாஜி சபாநாயகர் ஜெயகுமார் கேள்வி

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ''தற்போதைய சட்ட சபையை, 16வது சட்டசபை என கூறும் நிலையில், நுாற்றாண்டு விழா கொண்டாடுவது முரணாக இல்லையா?'' என, முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.சுதந்திரம் பெற்ற பின், 1952ல் நடந்த தேர்தலுக்கு பின் உருவான சட்டசபையை, முதல் சட்டசபை என, தமிழக
சட்டசபை, நூற்றாண்டு விழா , சபாநாயகர்,கேள்வி

சென்னை: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ''தற்போதைய சட்ட சபையை, 16வது சட்டசபை என கூறும் நிலையில், நுாற்றாண்டு விழா கொண்டாடுவது முரணாக இல்லையா?'' என, முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சுதந்திரம் பெற்ற பின், 1952ல் நடந்த தேர்தலுக்கு பின் உருவான சட்டசபையை, முதல் சட்டசபை என, தமிழக சட்டசபை செயலக இணைய தளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். அதன்பின், ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசு அமைந்ததை இரண்டாவது, மூன்றாவது சட்டசபை என, கணக்கிட்டு உள்ளனர். தற்போது, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது, 16வது சட்டசபை என இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில், அ.தி.மு.க., ஆட்சியில், 2012ம் ஆண்டு, சட்டசபை வைர விழா கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில், போர் நினைவு சின்னம் அருகே, சட்டசபை வைர விழா வளைவும் அமைக்கப்பட்டது.அதேநேரம், 1989ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சட்டசபை பொன் விழாவை கொண்டாடி உள்ளார். இது என்ன கணக்கு என்றால், சுதந்திரத்துக்கு முன் 1937ல் தேர்தல் நடத்தப்பட்டு, முதல் சட்ட சபை கூடியதன் அடிப்படையில், 1987ல் பொன்விழா கொண்டாடப்பட வேண்டும்.
அந்த ஆண்டு விழா நடக்காததால், 1989ல் பொன்விழா கொண்டாடப்படுவதாக அப்போதைய முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசு, இரண்டையும் கணக்கில் கொள்ளாமல், 1921ம் ஆண்டு சென்னை மாகாணமாக இருந்தபோது, சட்டசபை உருவாக்கப்பட்டதன் அடிப்படையில், நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதாக அறிவித்து உள்ளது. ஒவ்வோர் அரசும், ஒவ்வொரு விதமாக விழாவை கொண்டாடுவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கூறியதாவது:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை, சட்டசபையில் திறப்பது அவர்கள் விருப்பம். ஆனால், வரலாற்றை மாற்றக் கூடாது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், அரசியலமைப்பு சட்டத்தின்படி, அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு 1952ல் தேர்தல் நடத்தப்பட்டு முதல் சட்டசபை கூடியது.
எனவே, அந்த ஆண்டை கணக்கிட்டு, நான் சபாநாயகராக இருந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம், சட்டசபை வைரவிழா கொண்டாட வேண்டும் என்று கூறினேன். அதன்படி, விழா கொண்டாடப்பட்டது. அப்போது தனபால், சபாநாயகராக இருந்தார்.சுதந்திரத்துக்கு முன், தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் 1937ல் நடந்தது. அதன்படி, சட்டசபை பொன்விழா 1987ல் கொண்டாடப்பட வேண்டும். அப்போது, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாததால், விழா நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து, கருணாநிதி பொன்விழாவை கொண்டாடினார்.

அவரது தந்தை கணக்கிட்ட ஆண்டையும், நாங்கள் எடுத்துக் கொண்ட ஆண்டையும் கணக்கில் கொள்ளாமல், ஸ்டாலின் புதிதாக 1921ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா கொண்டாடுவதாக கூறுவது, முரணாக உள்ளது. ஒரே கட்சியில், இரு விதமான நிலைப்பாடுகள். தற்போது நுாற்றாண்டு விழா என்றால், கருணாநிதி பொன்விழா எடுத்தது தவறா என்பதை, முதல்வர் விளக்க வேண்டும். என்னை பொறுத்தவரை, 1921, 1937 இரண்டும் தவறு. முதல் சட்டசபை, 1952ல் கூடியதைத் தான் கணக்கில் எடுக்க வேண்டும். விழா எடுக்க வேண்டும் என்பதற்காக, வரலாற்றை மாற்றுவதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


குறிப்பிட்ட நபர்களுக்கே அழைப்புதமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா, ஆக., 2 மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சட்டசபை கட்டடம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. சட்டசபை கட்டடத்தின் மேல்புறம் புதிதாக, 'தமிழ் வாழ்க' என்ற இரண்டு பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. கட்டடம் முழுதும் அலங்கார மின் விளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தின் வெளிப்புறம், சாலையின் இரு புறங்களிலும் மரங்களில், வண்ண மின் விளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி, விழாவிற்கு குறைந்த நபர்களை மட்டும் அழைக்க, அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான அழைப்பிதழ் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அவர்கள் விழாவிற்கு, கட்டாயம் அழைப்பிதழுடன் வர வேண்டும்; விழா முடியும் வரை வைத்திருக்க வேண்டும்.அழைப்பிதழுடன் வருவோர், மாலை 4:00 மணிக்கே, தங்களுக்கான இருக்கையில் அமர வேண்டும். மொபைல் போன் எடுத்து வர அனுமதி இல்லை. அழைப்பாளர்கள் அனைவரும், விழா முடியும் வரை, 'என் -95' முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சட்டசபை மண்டபத்திற்குள், விழா முடியும் வரை அமைதி காக்க வேண்டும் என,அழைப்பிதழில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
30-ஜூலை-202120:59:21 IST Report Abuse
S Bala தமிழ்நாடு (சென்னை மாநிலம்) ஆரம்பிக்கப்பட்டதே 1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்ட போதுதான். அதற்கு முன் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எல்லாம் சென்னை மாநிலத்தில் இருந்தன
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
30-ஜூலை-202115:20:31 IST Report Abuse
r.sundaram தகப்பன் சொல்லை பிள்ளைகள் கேட்பதில்லை என்பது இதிலும் நிஜமாகிறது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
30-ஜூலை-202113:56:52 IST Report Abuse
duruvasar என்னடா இது புது புரளியா இருக்கு. சிட்னி கிரிக்கெட் பிட்ச்க்குதான் பேமசுனு சொல்லுவாங்க, அச்சு பிட்சுக்குமா பேமசு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X