குழம்பிய இந்தியா... புலம்பிய ரசிகர்கள்; 81 ரன்னுக்கு சுருண்டு தோல்வி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொழும்பு: கொரோனாவால் முன்னணி வீரர்கள் பாதிக்கப்பட, குழம்பிய நிலையில் இருந்த இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. 81 ரன்களுக்கு சுருண்டு அநியாயமாக தோற்றது. இப்படி ஒரு தொடரில் பங்கேற்க வேண்டுமா என ரசிகர்கள் புலம்பினர்.இலங்கை சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. தொடர் 1-1
IND vs SL, India, Sri Lanka, 3rd T20I, SLvsIND

கொழும்பு: கொரோனாவால் முன்னணி வீரர்கள் பாதிக்கப்பட, குழம்பிய நிலையில் இருந்த இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. 81 ரன்களுக்கு சுருண்டு அநியாயமாக தோற்றது. இப்படி ஒரு தொடரில் பங்கேற்க வேண்டுமா என ரசிகர்கள் புலம்பினர்.

இலங்கை சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. தொடர் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது, கடைசி போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த நவ்தீப் சைனிக்குப் பதில், சந்தீப் வாரியர் 30, அறிமுக வாய்ப்பு பெற்றார்.


தவான் 'அவுட்'


இந்திய அணிக்கு ஷிகர் தவான், ருதுராஜ் ஜோடி துவக்கம் தந்தது. சமீரா வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்ட தவான், தனஞ்செயாவிடம் 'பிடி' கொடுத்து 'டக்' அவுட்டானார். ஐ.பி.எல்., விஜய் ஹசாரே டிராபி தொடர்களில் ரன்மழை பொழிந்த படிக்கல்லுக்கு, சர்வதேச போட்டி சரியாக வரவில்லை போல. முதல் போட்டியில் 29 ரன் எடுத்த இவர், நேற்று 9 ரன்னுக்கு அவுட்டாகி திரும்பினார்.


latest tamil newsகழன்ற 'டாப் ஆர்டர்'


போட்டியின் ஐந்தாவது ஓவரை ஹசரங்கா வீசினார். இதன் நான்காவது பந்தில் சஞ்சு சாம்சன், 'டக்' அவுட்டானார். கடைசி பந்தில் ருதுராஜும் (14) வெளியேறினார். கொரோனா காரணமாக ஐந்து பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 5 ஓவரில், 25 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 6 வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர், பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

அடுத்த சில நிமிடத்தில் நிதிஷ் ராணா (6) அவுட்டானார். 'டுவென்டி-20' அரங்கில் முதல் 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா, புவனேஷ்வர் 16 ரன் எடுத்து அவுட்டாக, ராகுல் சகார் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வருண் சக்ரவர்த்தியும் வந்த வேகத்தில் 'டக்' அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ரன் மட்டும் எடுத்தது. அதிகபட்சம் 23 ரன் எடுத்த குல்தீப், சக்காரியா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 82 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஹசரங்கா (14), தனஞ்செயா (23) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியாவின் ராகுல் சகார் 3 விக்கெட் சாய்த்தார். இந்திய அணி 1-2 என தொடரை இழந்தது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
30-ஜூலை-202110:40:23 IST Report Abuse
sundarsvpr இரண்டாம் தர அணி என்று கூறி நம் பலவீனத்தை மறக்கக்கூடாது. தோல்வி ஏற்படும் என்று தெரிந்து விளையாடவில்லை. மோசமான ஆட்டங்கள் தவிர்க்க யுக்திகள் தேவை.
Rate this:
Cancel
Pondicherry Mannan - Pondicherry,இந்தியா
30-ஜூலை-202109:50:31 IST Report Abuse
Pondicherry Mannan பாவம் இரண்டாம் தர இந்திய அணி. மொத்தமாக அனுபவ மூத்த வீரர்கள் இல்லாத போது அவர்கள் என்ன செய்வார்கள் ?
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு இந்தியா என்ற நாட்டு பற்றுடன் வினளயாடிய நாட்கள் ஆட்கள் இப்பொழுது இல்லை, பணம் பணம் பணம் இதை ஒன்றே குறிக்கோளாக கொண்டு விளையாடுபவர்கள் இப்பொழுது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X