3ம் அலையை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பு மேம்படுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3ம் அலையை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பு மேம்படுகிறது

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 29, 2021
Share
சென்னை :''தமிழகத்தில், மூன்றாம் அலையை எதிர்கொள்ள, சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை யில், நேற்று நடந்தது. இதில், விருதுநகர் மருத்துவ கல்லுாரி முதல்வர் சங்குமணி உள்ளிட்ட 31 டாக்டர்களுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,
'கொரோனா 3ம் அலை, சுகாதாரம்,  மேம்படுகிறது'

சென்னை :''தமிழகத்தில், மூன்றாம் அலையை எதிர்கொள்ள, சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை யில், நேற்று நடந்தது. இதில், விருதுநகர் மருத்துவ கல்லுாரி முதல்வர் சங்குமணி உள்ளிட்ட 31 டாக்டர்களுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், விருதுகளை வழங்கி
கவுரவித்தார்.

பின், கவர்னர் பேசியதாவது:உலகம் முழுதும், மருத்துவ தொழில் மிக உயர்வானதாகவும், மதிப்புக்குரியதாகவும் கருதப்படுகிறது. உயிரைக் காப்பாற்றுவதாலும், வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாலும், டாக்டர்களை கடவுளுக்கு அடுத்த நிலையில், இந்த சமூகம் போற்றுகிறது.


நம் நாட்டில் கொரோனா தொற்று பரவியபோது, இரவு, பகல் பாராமல் டாக்டர்கள் சேவையாற்றினர். நோயாளிகள் உயிரை காக்க சிகிச்சை அளித்த போது, டாக்டர்களும் தொற்றுக்கு உள்ளாகினர். அதில், சில டாக்டர்கள் இறந்தனர். ஆனால், தொடர்ந்து டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்; என்ன மருந்து வழங்க வேண்டும் என்ற தெளிவு கூட இல்லை. இருந்தபோதிலும், வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும், மருந்துகளையும் அனுபவ ரீதியாக, கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி காப்பாற்றிய டாக்டர்கள், போர் சூழலில், ராணுவ வீரர்கள் போல் செயல்பட்டனர்.

தற்போது, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு, மேலும் வலுவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X