பொது செய்தி

தமிழ்நாடு

பென்னிகுக் வளாகத்தில் பன்னாட்டு நூலகம் அமைக்க எதிர்ப்பு

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மதுரை ;''ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாறு உருவாக்குவதை அனுமதிக்க மாட்டோம்'' என பென்னிகுக் நினைவு இல்லத்தை கருணாநிதி நுாலகமாக மாற்றுவதற்கு மதுரையில் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.முல்லைப்பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் பென்னிகுக்கின் நினைவு இல்லம் மற்றும் வளாகம் மதுரை நத்தம் மெயின் ரோட்டில் 2 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த இடத்தை கலைஞர்
ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாறா : பென்னிகுக் வளாகத்தில் பன்னாட்டு நுாலகம் அமைக்க எதிர்ப்பு

மதுரை ;''ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாறு உருவாக்குவதை அனுமதிக்க மாட்டோம்'' என பென்னிகுக் நினைவு இல்லத்தை கருணாநிதி நுாலகமாக மாற்றுவதற்கு மதுரையில் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் பென்னிகுக்கின் நினைவு இல்லம் மற்றும் வளாகம் மதுரை நத்தம் மெயின் ரோட்டில் 2 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த இடத்தை கலைஞர் பன்னாட்டு நினைவு நுாலகம் அமைக்க தேர்வு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். பென்னிகுக் நினைவு இல்லம் மற்றும் வளாகத்தை இடித்துவிட்டு கலைஞர் பன்னாட்டு நினைவு நுாலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அனீஷ்சேகரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.விவசாய சங்கத்தினர் கூறியதாவது:


*வீட்டு பூஜையறையில் பென்னிகுக் படம்



ராமன், தலைவர், சங்க கூட்டமைப்பு: தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிய மனித கடவுள் கர்னல் பென்னிகுக். விவசாயிகளின் பூஜையறையில் அவர் படமும் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளுக்கு அவரது பெயரை வைத்து மரியாதை செய்கிறோம். செல்லம்பட்டியில் திருமங்கலம் பிரதான கால்வாய் நத்தப்பட்டி அருகே கிராமப் பொது இடத்தில் பென்னிகுக்கின் 7 அடி உயர சிலை, மணிமண்டபம் அமைத்து ஓராண்டாகிறது. அரசியல்வாதிகள் சிலை திறப்பதற்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கின்றனர்.
இந்த நிலையில் பென்னிகுக்கின் சொந்த செலவில் கட்டிய வீட்டை இடித்துவிட்டு நுாலகம் அமைக்க திட்டமிட்டதே பெரும்தவறு. இதை இடிக்க நினைத்தால் தென்மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.


*கரிகாலனைப் போல பென்னிகுக்



திருப்பதி, செயலாளர், சங்க கூட்டமைப்பு: காவிரியாறு, பெரியாறு அணைநீரை அடகு வைத்தது கருணாநிதி தான். அவரது நினைவாக நுாலகம் கட்டுவதற்கு மதுரையில் வேறிடம் கிடைக்கவில்லையா. ஒரு வரலாற்றை அழித்து விட்டு இன்னொரு வரலாற்றை உருவாக்கக்கூடாது. மாட்டுத்தாவணியில் உள்ள இடத்தை தேர்வு செய்வதில் அவர்களுக்கு என்ன பிரச்னை.
மதுரை மட்டுமல்ல தென்மாவட்ட மக்களே கொண்டாடும் தெய்வம் அவர். கல்லணை தந்த கரிகாலனைப் போல போற்றுதலுக்குரியவர் பென்னிகுக்.


*பென்னிகுக் எங்கள் குலதெய்வம்



அழகுசேர்வை, தலைவர், விவசாய சங்கம், மதுரை: மதுரையில் எத்தனையோ இடங்கள் உள்ளன. அங்கு சென்று நுாலகம் அமைக்கலாம். எங்கள் குலதெய்வத்தின் இடத்தை தேர்வு செய்தது மகாதவறு. விவசாயிகளான எங்களை வஞ்சம் தீர்ப்பது போல உள்ளது. அணை கட்டாவிட்டால் தென்மாவட்டம் என்ன நிலைக்கு ஆளாகியிருக்கும். அதை நினைத்து பார்த்து வேறிடத்திற்கு நுாலகத்தை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
30-ஜூலை-202113:21:31 IST Report Abuse
sankaseshan தேனீ விவசாயிகளுக்கு நன்மை செய்த அயல் நாட் டு புண்ணிய வானுக்கு கிடைத்த பெருமையை மக்கள் பணத்தை ஆட்டையை போட்டு அனுபவித்து வாழ்ந்தவர்கள் திருட பார்ப்பது அநாகரிகத்தின் உச்சம் .
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-ஜூலை-202112:47:07 IST Report Abuse
Anand அமையட்டும் விடுங்கள், அடுத்த ஆட்சியில் பென்னிகுயிக் நினைவு மருத்துவமனையாக மாற வாய்ப்பிருக்கு...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூலை-202110:47:13 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தேசத்தை மதித்தவர்களுக்கும் தேச பற்று உள்ளவர்களுக்கும் இந்த புதிய அரசால் அவமரியாதை மட்டுமே கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X