கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிகை

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
விழுப்புரம்:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் புகாரில், விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.தமிழக போலீசில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து,

விழுப்புரம்:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் புகாரில், விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தமிழக போலீசில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.பாலியல் புகார் தொடர்பாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏப்., 23ல் ஆஜரானார்.

அவர் அளித்த வாக்குமூலத்தை, நீதிபதி பூர்ணிமா பதிவு செய்து கொண்டார்.இந்நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி கோபிநாத் முன்னிலையில், சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையிலான போலீசார் ஆஜராகினர். அப்போது, இவ்வழக்கு தொடர்பாக 400 பக்க குற்றப்பத்திரிகை யை தாக்கல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X