அவதூறு பேச்சு : திரிணமுல் காங். பெண் எம்.பி.,மீது பா.ஜ., எம்.பி. புகார்

Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தன்னை' பீஹாரி குண்டர்' என பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என திரிணாமுல் காங்., பெண் எம்.பி., மெஹூவா மொய்த்ரா மீது பா.ஜ. எம்.பி., நிஷிகாந்த் துபே, லோக்சபா சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த, 19ம் தேதி துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில்
அவதூறு பேச்சு : திரிணமுல் காங். பெண் எம்.பி.,,.ஜ., எம்.பி. புகார்

புதுடில்லி: தன்னை' பீஹாரி குண்டர்' என பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என திரிணாமுல் காங்., பெண் எம்.பி., மெஹூவா மொய்த்ரா மீது பா.ஜ. எம்.பி., நிஷிகாந்த் துபே, லோக்சபா சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த, 19ம் தேதி துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், பார்லி.,யின் இரு அவைகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது. அப்போது, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, 'பீஹாரி குண்டர்' என, என்னை பார்த்து மூன்று முறை குறிப்பிட்டார்.


latest tamil news



நான் எம்.பி.,யாக 13 ஆண்டுகளாக உள்ளேன். இதுபோல் அவமதிக்கும் வகையில் யாரும் பேசியதில்லை. பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநில மக்களை, திரிணமுல் காங்.,குக்கு பிடிக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு மொய்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். ''அது போன்ற ஒரு கூட்டமே நடக்கவில்லை. அப்படி இருக்கையில் நான் எப்படி அவரை திட்டியிருக்க முடியும்,'' என, மொய்த்ரா குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
30-ஜூலை-202116:54:07 IST Report Abuse
sundarsvpr பாராளுமன்ற அவை தலைவரிடம் கூறி என்ன பயன்? அவரால் இருக்கையில் உட்கார்ந்து அவையை நடத்த இயலவில்லை. உட்காருமுன் கூச்சல் குழப்பம். சிறிய சலசலப்பு இல்லாமல் அமைதியாய் அவையை நடுத்துகிறோரோ அவர் பாரத ரத்தின விருதுக்கு தகுதியானவர். அப்படி நடக்க வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
30-ஜூலை-202109:26:04 IST Report Abuse
Appan இவர்களை நம்பித்தான் பிஜேபி கட்சி இருக்கிறது..நாடு உருப்பதால் போல் தான்..ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில்..இப்படி நடந்தால் இந்திய இருக்குமா..?.சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களுக்கு அடிமை..இப்போ இந்திக்காரர்களுக்கு அடிமை..இதற்க்கா சுதந்திரம் பெற்றோம்..?..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202102:13:43 IST Report Abuse
Bhaskaran தமிழ் நாட்டில் ஒரு மந்திரி பீஹாரிகள் மூலையில்லாதவங்கன்னு சொல்லியிருக்காருப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X