இந்தியா

போன் ஒட்டு கேட்பு விவகாரம்: தலைமை நீதிபதிக்கு கடிதம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : 'மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. தயங்கும் நிலைநம் நாட்டைச்
போன் ஒட்டு கேட்பு விவகாரம்: தலைமை நீதிபதிக்கு கடிதம்


புதுடில்லி : 'மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின.


latest tamil news




தயங்கும் நிலை



நம் நாட்டைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள், கல்வியாளர்கள், பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டோர் என, பல்வேறு தரப்பினர் உளவு பார்க்கப்படுகின்றனர்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அதிகாரமுள்ளவர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூற தயங்கும் நிலை ஏற்பட்டு விடும்.


தகுந்த உத்தரவு



மனித உரிமை ஆர்வலர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து தரப்பு மக்களையும் பழிவாங்குவதற்கு இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற உளவு மென்பொருளை வாங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இஸ்ரேல் நிறுவனத்தில் விசாரணை



போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரிக்கும், என்.எஸ்.ஓ., குழுமம் நிறுவனத்தில் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பயங்கரவாதம் மற்றும் கொடூர குற்றங்களை தடுப்பதற்காகவே பல நாடுகளுக்கு எங்கள் மென்பொருளை விற்பனை செய்கிறோம்.
இந்த மென்பொருளை ஒரு நாட்டின் அரசு குறிப்பிடும் விசாரணை அமைப்பு களுக்கு மட்டுமே தருகிறோம். எங்கள் செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானவை.பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. இஸ்ரேல் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யான செய்தி என்பது, விசாரணையில் தெரியவரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202118:48:16 IST Report Abuse
அப்புசாமி சித்தே சும்மா இருங்கோ... நீதிபதிகளின் போன்களே ஒட்டுக் கேட்கப் பட்டிருக்குமோன்னு டவுட் வருது. யாரையும் நம்ப முடியலை.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
30-ஜூலை-202113:36:31 IST Report Abuse
Chakkaravarthi Sk மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேச விரோத சட்டம் பற்றிய அவருடைய மேலான கருத்துக்களை இன்னும் சில காலம் பொறுத்து மீண்டும் வைக்கலாம். இப்பொழுது நிலைமை சரியில்லை என்று புரிந்து கொண்டால் சரி. இது பொது மக்களின் கருத்து. ஜனநாயக நாட்டில் பொது மக்களின் கருத்துக்கும் நீதிபதிகள் செவி கொடுக்கலாமே
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
30-ஜூலை-202113:33:32 IST Report Abuse
Chakkaravarthi Sk உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள், அவசியம் இந்த ஒட்டுக்கேட்பு பற்றி விசாரிக்கவேண்டும். ஒரு வேலை மோடியும் அமித் ஷா வும் பொய் சொன்னார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன தண்டனையோ அதை கொடுக்கட்டும். அல்லது எதிர்கட்சிகளும், இந்த கடிதம் எழுதியவர்களும் பொய்யாக குற்றம் சட்டி இருந்தால் அதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும். பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தினசரி செலவு எவ்வளவோ அவ்வளவு இந்த எதிர்க்கட்சி எம் பீக்களிடம் அல்லது அந்த அந்த கட்சிகளின் தலைமையிடம் இருந்து அபராதமாக விதித்து அந்த தொகையை உடனடி வசூல் செய்து இந்தியா பாராளுமன்ற விவகாரத்துறையிடம் அளிக்க வேண்டும். மேலும் வழக்கு செலவு என்று ஒரு கணக்கிட்டு இந்த கடிதம் எழுதிய நபர்களிடம் இருந்து வசூலித்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். இனிமேல் யாரும் இப்படி தேவையற்ற காரணங்களுக்காக நீதிமன்றத்தையோ பாராளுமன்றத்தையோ செயல்பட விடமால் செய்தால் இது தான் நடக்கும் என்று காட்ட வேண்டும். எந்த அரசியல் கட்சி அபராதத்தை செலுத்தவில்லையோ அந்த கட்சி பத்து வருடங்களுக்கு பாராளுமன்றம், மற்றும் சட்ட மன்றம் தேர்தலில் நிற்க தடை அமல் படுத்த வேண்டும். இதை மீண்டும் உச்சா நீதிமன்றத்தில் மீண்டும் எதிர்த்து வழக்கு தொடுக்க கூடாது என்று முடிவாக தீர்ப்பளிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X