தமிழ்நாடு

ஸ்டாலினை சந்திக்க அ.தி.மு.க., 'மாஜி' எம்.பி., தயார்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
தஞ்சாவூர் : முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில், தி.மு.க.,வில் இணைவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., நேரம் கேட்டு காத்திருக்கிறார்.தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். 2014ல் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தும், சட்டசபை தேர்தலில் இவருக்கு சீட்
ஸ்டாலின், அ.தி.மு.க.,  மாஜி எம்.பி.,சந்திப்பு, தயார்

தஞ்சாவூர் : முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில், தி.மு.க.,வில் இணைவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., நேரம் கேட்டு காத்திருக்கிறார்.தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். 2014ல் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.

வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தும், சட்டசபை தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த பரசுராமன் சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி வீடியோவெளியிட்டார்.


latest tamil newsஇந்நிலையில் நேற்று மதியம், 1:30 மணிக்கு தி.மு.க., மாவட்ட அலுவலகத்திற்கு தன் ஆதரவாளர்களுடன் வந்த பரசுராமன், தெற்கு மாவட்ட செயலரும், திருவையாறு எம்.எல்.ஏ.,வுமான சந்திர

சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து, இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, தி.மு.க.,வில் இணைவதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். சந்திரசேகரன்,முதல்வர் ஸ்டாலினிடம் பேசி பதில் அளிப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202118:18:09 IST Report Abuse
Prasanna Krishnan All look like.. in photo
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202114:26:20 IST Report Abuse
vpurushothaman ஆட்சி மாறினா ஒடிப் போறதுங்கிறதைக் கொள்கையாகவே சிலர் வெச்சிருக்காங்க . கொஞ்ச நாள் போஸ்டரிலே போடுவாங்க .அப்புறம் அம்போதான். " ஒரிஜினல்தான் " சம்பாதிக்கும். உங்களை உள்ளே விடமாட்டாங்க. விளம்பரத்துக்கு மட்டும்தான் உங்களைப் போன்றவர்கள். போனவர்களைப் பார்த்தாவது திருந்துங்கள்.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-202114:00:57 IST Report Abuse
Saravanan சீக்கிரம் எல்லா பதவி வெறி ஆசை கொண்டவர்களும் போய் சேருங்கள் இனம் இனத்துடன் சேரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X