அரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு

Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை : ''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர், பாண்டியராஜன். இவர், அரசியலுக்கு வருவதற்கு முன், 'மாபா' என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின், தன் பதவிகளை, மற்றவர்களிடம்
 அரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு

சென்னை : ''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர், பாண்டியராஜன். இவர், அரசியலுக்கு வருவதற்கு முன், 'மாபா' என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின், தன் பதவிகளை, மற்றவர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.



சமீபத்திய சட்டசபை தேர்தலில், ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, கட்சியினர் உள்ளடியால் தோல்வியை தழுவினார். இதனால், மிகுந்த விரக்தியில் உள்ளார். தற்போது, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணை செயலராகவும் உள்ளார். இவர், மாபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



latest tamil news

பின், அவர் கூறியதாவது:'மாபா' மனிதவள நிறுவனம், ஒரு காலத்தில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால், நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல், தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டேன். தற்போது, தொழிலை கவனிக்க முடிவு செய்து, பொறுப்பேற்று உள்ளேன். அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன்.



சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக, அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில், அ.தி.மு.க.,வில் பொறுப்புகளை தொடர்கிறேன். இவ்வாறு, பாண்டியராஜன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

karuppasamy - chennai,இந்தியா
02-ஆக-202110:19:54 IST Report Abuse
karuppasamy எப்படியும் தனது தாய் கட்சியான பிஜே பி கட்சிக்கு சென்று விடுவார். இப்பொழுது கார்போரேட்டர்களுக்குத்தான் அதிபர்களுக்குத்தான் பிஜே பி முக்கியத்துவம் கொடுக்கிறது .பணம் அடிப்பது எப்படி
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-ஆக-202104:18:01 IST Report Abuse
meenakshisundaram தவறு ,இந்த மாதிரி கால கட்டத்திலே தான் அதிமுகவுக்கு இவரை போன்றவறின் சேவை மிக தேவை.இல்லைன்னா 'ஆட்டம் 'போடும் திமுகவுக்கு சாதகமே ,மக்கள் அதிமுகவிடம் ஒதுங்கிப்போவதை விரும்பவில்லை .பொய்யர்களுக்கு எதிராக அரசியல் செய்வது சற்று கடினம் என்றாலும் மக்கள் நலம் கருதி அன்றாட அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்ல முடிவது அல்ல.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-ஜூலை-202115:02:01 IST Report Abuse
Vena Suna தினகரனால் மற்றும் சசிகலாவால் அதிமுக தோற்றது.பாவம் பாண்டியராஜன்.நல்ல மனிதன்.
Rate this:
31-ஜூலை-202103:10:15 IST Report Abuse
Vin Vinodhpandiarajan is an Opportunist...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X