தனியார் பள்ளி கட்டணம் வழக்கில் இன்று உத்தரவு?

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், 2020ம் ஆண்டில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது.இந்த மனுக்கள், நீதிபதி
Private Schools, School Fee, High Court

சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், 2020ம் ஆண்டில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது.இந்த மனுக்கள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தன. பள்ளிகள் தரப்பில், 'உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 85 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; முழுமையாக செலுத்த முடியாதவர்கள், 75 சதவீத கட்டணத்தை அளிக்க வேண்டும்.

'கட்டணமே செலுத்த முடியாதவர்களை பொறுத்தவரை, தனிப்பட்டவர்களின் நிலையைப் பொறுத்து, அந்தந்த பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கும். கட்டணம் செலுத்தாதவர்கள், பள்ளியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்' என, தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது, தமிழகத்துக்கு பொருந்தாது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 75 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். கட்டண நிர்ணய குழுவில் உள்ள காலியிடங்கள், இரு மாதங்களில் நிரப்பப்படும்,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இவ்வழக்கில் இன்று அல்லது அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். மாநில பாடத்திட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., - ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
30-ஜூலை-202110:59:21 IST Report Abuse
Tamil schools threatened IF FEES NOT PAID they don't give TC & MARKSHEET, IF ANY STUDENTS LOSE THEIR ADMISSION FOR ENGG OR MEDICAL CAZ OF SCHOOL ATTITUDE THEN THEY ARE LIABLE TO PAY MINIMUM 1 CRORE FOR THAT LOSS TO THE STUDENT AND GOV. SCHOOL ALSO ILLEGALLY ENGAGED PRIVATE THIRD PARTY INSIDE THEIR SCHOOL CAMPUS FOR NEET AND IIT EXAMS AND FOR SUCH KIND OF illegal FEES NOT PAID CAZ OF PANDAMIC SITUATION ALSO SCHOOL THREATENS THEY DONT GIVE TC OR MARKSHEET. TO COLLECT PING FEE SCHOOL CAN PUT 24 MONTHS MONTHLY INSTALMENTS FOR STUDENTS WITHOUT INTREST BUT ONLY FOR SCHOOL FEES AND NOT FOR THIRD PARTY TRAINING INSIDE SCHOOL CAMPUS. GOV MUST ASK SCHOOLS TO UPLOAD TC AND MARKSHEET IN THEIR WEBSITE AND ALLOW STUDENTS TO USE THAT TO APPLY FOR ENGINEERING, NEET OR ARTS COLLEGES. IF STUDENT LOSE HIGHER STUDIES CAZ OF MONEY THIS IS THE WORST, SCHOOLS COLLECT FULL FEES BUT PAY ONLY HALF SALARY FOR TEACHERS, SO THERE IS NO LOSS & POLITICIAN RUNNING SCHOOLS THEY SUCH LOSS.THEY DONT LOSE ANYTHING CAZ OF ONE YEAR IF THEY COLLECT FEE IN INSTALMENTS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X