அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்?

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், படித்து முடித்த பின், சில நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி அளிக்கும் திட்டத்தை நீக்க, அந்நாட்டு பார்லி.,யில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்த பின், மூன்றாண்டுகள் வரை அந்நாட்டிலேயே தங்கியிருந்து வேலை பார்க்க,
foreign students, F1 visa, US lawmakers, bill, guest worker

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், படித்து முடித்த பின், சில நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி அளிக்கும் திட்டத்தை நீக்க, அந்நாட்டு பார்லி.,யில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்த பின், மூன்றாண்டுகள் வரை அந்நாட்டிலேயே தங்கியிருந்து வேலை பார்க்க, அந்நாட்டின் குடியுரிமை மற்றும் தேசிய சட்டம் இடம் அளிக்கிறது. இது, ஓ.பி.டி., எனப்படும், விருப்ப பயிற்சி திட்டம் என, அழைக்கப்படுகிறது.


latest tamil news



இந்த திட்டத்தின் கீழ், 80 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். இந்த திட்டத்தால், அமெரிக்க குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக குடியரசு கட்சி எம்.பி.,க்கள் குரல் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் குடியுரிமை மற்றும் தேசிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இந்த வேலை வாய்ப்பு திட்டத்தை நீக்க வலியுறுத்தி, குடியரசு கட்சி எம்.பி.,க்கள், பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்தனர்.

இந்த மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட பின், அதிபரின் ஒப்புதலுக்கு செல்லும். 'ஆனால், இரு சபைகளிலுமே ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், மசோதா நிறைவேறுவது கடினம்' என கூறப்படுகிறது.ஒருவேளை நிறைவேறினால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூலை-202110:34:56 IST Report Abuse
Pugazh V இட ஒதுக்கீடு இல்லாமல் இயங்கும் தனியார் ஆபீஸ்கள் மற்றும் கம்பெனிகளில் 60 - 70% நஷ்டத்தில் ஓடுகின்றன. அல்லது பொய் பித்தலாட்டம் வரிஏய்ப்பு மோசடிகள் செய்து ஜீவிக்கின்றன. ஐசிஐசிஐ கோச்சார் இட ஒதுக்கீடா? கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏஷியா, ஸ்பைஸ்ஜெட், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஏர்டெல், நோக்கியா எல்லாம் நஷ்டத்தில் ஓடுவதும் சிலது.ஊத்தி மூடப்பட்டதும் இட ஒதுக்கீடு ஆபீசர்களாலா? மணி டெல்லி என்ற வாசகர் எங்கே சத்தமே காணவில்லை??
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூலை-202110:25:14 IST Report Abuse
Natarajan Ramanathan மதுரை விருமாண்டி - ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறார்களாம்.....முயற்சி செய்யவும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூலை-202110:23:37 IST Report Abuse
Natarajan Ramanathan Shankar G - kuwait,......தமிழகத்தின் சமச்சீர் கல்வி போன்ற மனப்பாட அசிங்கங்கள் அமெரிக்காவில் அறவே கிடையாது. அங்கு சொல்லி கொடுப்பதைவிட சுயமாக புரிந்து படித்து அறிந்து கொள்வதே ஊக்குவிக்கப் படுகிறது. எனவே திறமை இல்லாதவர்கள் ஜொலிக்கவே முடியாது. இங்கிருந்து சென்ற குருகுல கல்வி முறைதான். நாம் அதை விட்டுவிட்டோம். ஆனால் அவர்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு விட்டார்கள்.
Rate this:
Shankar G - kuwait,குவைத்
30-ஜூலை-202110:39:31 IST Report Abuse
Shankar Gநீங்கள் சொல்லுவது ஒருவிதத்தில் சரி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X