ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி| Dinamalar

ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (1)
Share
டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வியுற்றார். ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் வில்வித்தை 'ரீகர்வ்' பிரிவு பெண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை செனியா பெரோவாவை எதிர் கொண்டார். இதில் முதல், மூன்றாவது
Deepika Kumari, Tokyo Olympics, Olympics 2020

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வியுற்றார்.

ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் வில்வித்தை 'ரீகர்வ்' பிரிவு பெண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை செனியா பெரோவாவை எதிர் கொண்டார். இதில் முதல், மூன்றாவது சுற்றை தீபிகாவும், இரண்டாவது சுற்றை செனியாவும் வென்றனர். நான்காவது சுற்றில் இருவரும் 26 புள்ளிகள் பெற்று சமன் செய்தனர். 5வது சுற்றில் செனியா வெற்றி பெற்றார். இதனையடுத்து ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் செனியாவை வீழ்த்திய தீபிகா, 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


latest tamil news




தோல்வி

காலிறுதிப்போட்டியில் தென் கொரியாவை சேர்ந்த ஆன்சானை சந்தித்தார். ஆன்சானின் துல்லிய தாக்குதலில், தீபிகா குமாரி 3 செட்டையும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். முதல் செட்டை 27-30 என்ற கணக்கிலும், 2-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் அவர் இழந்தார். ஆன்சான் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X