அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை : 'உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் தோல்வி அடைந்தால், தி.மு.க., ஒன்றிய செயலர்களின் கழுத்தை அறுத்து விடுவோம்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், மதுராந்தகத்தில் நடந்தது. அதில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
திமுக, அமைச்சர், அன்பரசன், ஊரக தொழில் துறை அமைச்சர்

சென்னை : 'உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் தோல்வி அடைந்தால், தி.மு.க., ஒன்றிய செயலர்களின் கழுத்தை அறுத்து விடுவோம்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், மதுராந்தகத்தில் நடந்தது. அதில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தல், மிக மிக முக்கியமான தேர்தல். ஆட்சியின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்கிற தேர்தல். கட்சியினரிடம் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை மறந்து, ஒற்றுமையாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

ம.தி.மு.க.,வில், 25 ஆண்டுகளாக இருக்கிற மல்லை சத்யா, நம்மை நம்பி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். அவரது தோல்விக்கு, முதல்வர் ஸ்டாலினே ரொம்ப வருத்தப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியாக வேண்டும். அதில் தோல்வி அடைந்தால், கட்சி ஒன்றிய செயலர்கள் கழுத்தை அறுத்து விடுவோம்.


latest tamil news



தி.மு.க.,வுக்கு துரோகம் செய்யும் கட்சியினர் வாழ மாட்டார்கள். எதிர்காலத்தில் உருப்பட மாட்டார்கள். தேர்தலில் துரோகம் செய்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். துரோகிகளை கேட்க நாதி இருக்காது. தலைமை அறிவிக்கிற வேட்பாளர்களை, வெற்றி பெற வைக்க வேண்டும்.

லோக்சபா, சட்டசபை தேர்தலில், எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரும்பி, மக்கள் ஓட்டுப் போடுவர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் யோக்கிமானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் என, வேட்பாளரை பார்த்து தான் ஓட்டுப் போடுவர்.இவ்வாறு, அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.


ஒன்றிய செயலர்களால் பாதிக்குமா வெற்றி?


சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் - ம.தி.மு.க., - கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில், தி.மு.க., ஒன்றிய செயலர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.மக்கள் நல பணிகள், நுாறு நாட்கள் வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்த பணிகளுக்கு தகுதியானவர்களை, கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைத்தால், அதை அதிகாரிகள் நிராகரித்து விடுகின்றனர்.

ஒன்றிய செயலர்கள் பரிந்துரைப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர். இதனால், தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொகுதி தொடர்பான எல்லா விவகாரங்களிலும், அவர்கள் சொல்படியே, அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்கின்றனர்.

திருப்போரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரும், வருவாய் துறை அதிகாரியும் கூட்டணி அமைத்து, 30 ஊராட்சிகளில், 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களின் வேலையை பறித்துள்ளனர்.இதனால், கடுப்பான அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக, கண்டன போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், திருச்சி மாவட்டம், மணப்பாறை தி.மு.க., ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமியின் மணல் கடத்தல் விவகாரத்தால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டார்.கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிற ஒன்றிய செயலர்களால், உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., வெற்றி பாதிக்குமோ என்ற அச்சம், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202119:50:46 IST Report Abuse
Nachi  Political King எ.வா வேலுதான் இதற்கு பதில் சொல்லனும்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
30-ஜூலை-202119:04:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கழுத்தை அறுப்பது திமுகவின் தொழில்
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
30-ஜூலை-202117:38:47 IST Report Abuse
JSS கொலை மிரட்டல் விட்ட இவரை கைது செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X