பொது செய்தி

இந்தியா

ஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியாவின் கலை, பண்பாட்டை வெளிப்படுத்தும், எட்டு பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளன. இதை, 'நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா' அறிவித்துள்ளது.இந்த தகவலை, கலை, பண்பாட்டு ஆய்வாளரும், சிங்கப்பூரில் இருந்து செயல்படும், 'இந்தியா பிரைட் பிராஜெக்ட்' நிறுவனருமான எஸ்.விஜயகுமார், பெருமையோடு
ஆஸ்திரேலியா, இந்தியா, கலை பொக்கிஷங்கள்

இந்தியாவின் கலை, பண்பாட்டை வெளிப்படுத்தும், எட்டு பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளன. இதை, 'நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா' அறிவித்துள்ளது.

இந்த தகவலை, கலை, பண்பாட்டு ஆய்வாளரும், சிங்கப்பூரில் இருந்து செயல்படும், 'இந்தியா பிரைட் பிராஜெக்ட்' நிறுவனருமான எஸ்.விஜயகுமார், பெருமையோடு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஆஸ்திரேலியாவின், கான்பரா நகரில் இருக்கும், தேசிய அருங்காட்சியகத்தில், இந்திய வரலாற்றை கூறும் ஏராளமான சிலைகளும், ஓவியங்களும் உள்ளன. அவற்றை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது.


latest tamil news



தமிழக போலீசில், சிலை பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சிலை திருடர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது தான், சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்பட்டது தெரிய வந்தது. அச்சிலைகளை, போலீஸ் அதிகாரிகள், மீண்டும் தமிழகத்துக்குக் எடுத்து வரும் முயற்சியில் இறங்கினர். விளைவு, பல நாடுகளில் இருந்தும் சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன.

எங்களை போன்ற சமுதாய ஆய்வாளர்களும், வெளிநாடுகளில் வாழ்ந்தபடி, இந்திய சிலைகள், பொக்கிஷங்கள் எங்கு இருக்கின்றன என்ற, தேடுதலில் உள்ளனர்.இப்படித் தான், ஆஸ்திரேலியாவின், கான்பரா அருங்காட்சியகத்தில் இருக்கும் பல்வேறு சிலைகளும், ஓவியங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது, எட்டு சிலைகளும், ஆறு ஓவியங்களும், இந்தியாவுக்கு திரும்புகின்றன.

அவை, தமிழகம், குஜராத், ராஜஸ்தான், உ.பி., ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவை. இந்தியாவுக்கு திரும்பியதும், அந்தந்த மாநிலங்களுக்கு, மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும்.


latest tamil news


இந்தியாவுக்கு திரும்பும் மகிஷாசுர மர்த்தினி கற்சிலை, குஜராத்தைச் சேர்ந்தது. துர்கை, எருமை மேல் இருப்பது போன்ற காட்சியுடைய சிலை, 12ம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. நடன நிலையில் இருக்கும் திருஞானசம்பந்தர், நாயன்மார் சிலை, தமிழகத்தை சேர்ந்தவை. இவை, 1960ல், சீர்காழிக்கு அருகில் உள்ள சாயாவனம் கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளன.

சுபாஷ் கவுர் என்ற, இந்திய சிலைத் திருடன் தான், இவற்றை, அமெரிக்காவுக்கு விற்றிருக்கிறான். அவன், சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் இருக்கிறான். இந்தியாவுக்கு திரும்பும், 14 பொருட்களில், 13ஐ, அமெரிக்காவில் இருக்கும் டீலர் வில்லியம் வுல்ப் என்பவர், 1968ல், ஆஸ்திரேலியாவுக்கு விற்றிருக்கிறார்.

ஒரு நாட்டில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்கள், அந்த நாட்டுக்குரியது தான் என, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், அவற்றை அந்த நாட்டுக்கே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, ஏற்கனவே, ஐ.நா., சபை அறிவித்துள்ளது. அது, மரபாக பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தான், தன் தேசிய அருங்காட்சியகத்தில், இந்தியாவுக்கு சொந்தமான கலைப் பொருட்கள் இருக்கின்றன என தெரிந்து, அது நிரூபிக்கப்பட்டதும், இந்தியாவுக்கு அவற்றை, ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
30-ஜூலை-202117:48:44 IST Report Abuse
Sidhaarth கருவறை யில் இருந்து யாரோட துணையுடன் கடத்தப்பட்டது சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X