சென்னை: 'உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியார்களையும், சிஸ்டர்களையும் கைது செய்ய, போப்பிடம் அனுமதி பெற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்' என அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், திமுக எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் மனைவியுமான மெர்ஸி செந்தில்குமார், சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
பாதிரியார் ஸ்டேன் சாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மெர்ஸி செந்தில்குமார் பேசியதாவது: பாதிரியார் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு குரல் கொடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு பாதிரியார் இறந்து விட்டார். அவருக்கு இப்போது குரல் கொடுக்கிறார்கள். நாளையும் எங்கோ ஓரிடத்தில், பாதிரியாரோ, சிஸ்டரோ போராடி கொண்டு தான் இருப்பார்கள்.

பாதிரியார்கள், சிஸ்டர்கள் வந்த பிறகே நமக்கு கல்வியும், பகுத்தறிவும் கிடைத்தது. உலகில் உள்ள பாதிரியார்களையும், சிஸ்டர்களையும், ஹூரோ, ஹூரோயின்களை போல பார்க்க வேண்டியது அவசியமானது. இந்த உலகில் எவனாக இருந்தாலும், பாதிரியாரையும், சிஸ்டரையும் கைது செய்ய வேண்டும் என்றால், வாடிகனில் உள்ள போப்பிடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசி உள்ளார். அவரது இந்த சர்ச்சை பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE