பொது செய்தி

இந்தியா

'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு?

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொச்சி: 'இஸ்ரோவில் உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம்' என சி.பி.ஐ. சந்தேகம் தெரிவித்து உள்ளது.கடந்த 1994ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் உளவு பார்த்ததாக அப்போதைய இஸ்ரோ மூத்த அதிகாரி நம்பி நாராயணன் மாலத்தீவுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் நம்பி நாராயணன்
Big Disclosure, ISRO, Espionage Case, CBI, Suspects, Pakistan, Conspiracy, இஸ்ரோ, உளவு, பாகிஸ்தான், சிபிஐ

கொச்சி: 'இஸ்ரோவில் உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம்' என சி.பி.ஐ. சந்தேகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 1994ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் உளவு பார்த்ததாக அப்போதைய இஸ்ரோ மூத்த அதிகாரி நம்பி நாராயணன் மாலத்தீவுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்கு தொடர்ந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


latest tamil news



இதற்கிடையே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட முன்னாள் புலனாய்வு பணியக துணை இயக்குனரும் குஜராத் முன்னாள் போலீஸ் டி.ஜி.யுமான ஸ்ரீகுமார் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அவருக்கு முன்ஜாமின் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வரும் 2ம் தேதி வரை ஸ்ரீகுமாரை கைது செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்போது நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் 'இஸ்ரோவில் உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம்' என குறிப்பிட்டுள்ளது. சி.பி.ஐ.யின் இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
30-ஜூலை-202117:45:23 IST Report Abuse
Sidhaarth இதுக்குதான் இஸ்ரோவை தனியார் க்கு குடுக்கறோம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூலை-202117:35:24 IST Report Abuse
Lion Drsekar எதற்க்காக பாகிஸ்தான் செல்லவேண்டும் அவர்களது பொறுப்பாளர்கள் மற்றும் சீனாவின் முக்கிய பொறுப்பாளர்கள் நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்க யாராலும் எதுவுமே செய்ய முடியாது, மன்னிக்கவும் அசிங்கம் பிடித்த அமைப்பு வந்தே மாதரம்
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
30-ஜூலை-202112:09:32 IST Report Abuse
Nesan வெற்றி உமதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X