சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சேலம்: மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குட்கா, கஞ்சா, கடல்பாசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரில் இருந்து சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பராக் மற்றும் குட்கா கடத்தி செல்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவில் கூடுதலாக ரோந்து

சேலம்: மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குட்கா, கஞ்சா, கடல்பாசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


பெங்களூரில் இருந்து சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பராக் மற்றும் குட்கா கடத்தி செல்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவில் கூடுதலாக ரோந்து செல்ல அவர் உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று இரவு சேலம் டவுண் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சீலநாயக்கன்பட்டி, அன்னதானபட்டி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது லாரி மார்க்கெட்டில் இரண்டு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த லாரிகளில் என்ன உள்ளது என போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது பான்பராக் மற்றும் குட்கா மூட்டைகள் மாட்டு தீவன மூடைகளுக்கு அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரண்டு லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 7 ஆயிரத்து 300 கிலோ பான்பராக் குட்கா மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு ஒரு கோடியே 70 ஆயிரம் ஆகும் .


latest tamil news



இந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு லாரிகளா கொண்டு வந்து நிறுத்தி யாருக்கு பான்பராக் குட்கா கடத்தி செல்லப்பட்டது என விசாரித்து வருகிறார்கள். இதுபோல சேலம் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து மற்றொரு வேனுக்கு பார்சல் மூட்டைகள் இறக்கிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த உதவி கமிஷனர் ஆனந்தக்குமார் அங்கு சென்று விசாரித்தபோது லாரியிலிருந்து பான்பராக் ,குட்கா ஆகியவை மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் லாரியையும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பான்பராக் ,ஹான்ஸ் இருந்தது. இந்த லாரியையும், வேனையும் போலீசார் அம்மாபேட்டை காவல் நிலையம் எடுத்து வந்து தற்போது விசாரித்து வருகிறார்கள்.

சேலத்தில் நேற்று ஒரே நாளில் பான்பராக் ,குட்கா கடத்தி வந்த 3 லாரி, ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக் குட்கா மதிப்பு 2 கோடிக்கு மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகன தணிக்கையை தீவிரமாக நடத்தி பான்பராக், குட்கா கடத்திய லாரிகளை பறிமுதல் செய்த உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.


latest tamil news




கடல்பாசி- கஞ்சா மூடை


கொடைக்கானலில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல்பாசிகள் 40 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறை, மற்றும் போலீசார் இணைந்து வேனை மறித்து பிடித்தனர். இதில் குப்பமமாள்பட்டியை சேர்ந்த சதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.


latest tamil news



உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் எஸ்.பி., தனிப்படையினர் நடத்திய சோதனையில் 240 கிலோ கஞ்சா, ஒரு கார், 2 டூ வீலருடன் ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202120:25:26 IST Report Abuse
அப்புசாமி ஆமாம்... பிடிபட்ட பான்பராக், குட்காவையெல்லாம் என்ன செய்வாங்க?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-ஜூலை-202112:54:43 IST Report Abuse
raja சதீசு பெரு மட்டும் போட்டுடீங்க.... ஏன் மத்தவங்க பெரு தெரியாதா... ஓஹோ.. அவங்க எல்லாம் மர்ம நபர்களோ......
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூலை-202110:32:46 IST Report Abuse
Natarajan Ramanathan கடல்பாசிகள் கடலில்தானே கிடைக்கும்? கொடைக்கானலில் இருந்து எப்படி கடத்த முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X