குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
டோக்கியோ: ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்தியாவின் லவ்லலினா, அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 7வது நாளான இன்று (ஜூலை 30) குத்துச்சண்டையின் 64-69 கிலோ எடைப்பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா, சீன தைபேயின் சின்-சென்
Olympics, IND, Boxing, Lovlina Borgohain, SemiFinal, Medal, ஒலிம்பிக், குத்துச்சண்டை, இந்தியா, லவ்லினா, அரையிறுதி, பதக்கம்

டோக்கியோ: ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்தியாவின் லவ்லலினா, அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 7வது நாளான இன்று (ஜூலை 30) குத்துச்சண்டையின் 64-69 கிலோ எடைப்பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா, சீன தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி அதிரடி காட்டிய லவ்லினா, 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.


latest tamil news


அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Kumbakonam,இந்தியா
30-ஜூலை-202120:40:41 IST Report Abuse
Siva அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்றால் தான் பதக்கம் உறுதி. இருந்தாலும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள். தங்கம் வெல்ல வாழ்த்துகள்.
Rate this:
Cancel
Ramakrishnan R - kalpakkam,இந்தியா
30-ஜூலை-202115:50:17 IST Report Abuse
Ramakrishnan R பிரமாதம் லவ்லலினா தங்கம் வெல்க
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூலை-202114:32:53 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நாட்டுக்கு பதக்கம் வாங்கி குவிக்க உள்ள பாரத தாயின் புதல்விகளுக்கு வாழ்த்துக்கள் ..ஜான்சி ராணிகல் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X