பொது செய்தி

தமிழ்நாடு

‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு!'

Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை பல்கலையின், பொருளாதாரத் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மு.நாகநாதன், 'சென்னை பல்கலையா; சங்கர் பாபா கல்விக் கழகமா?' என்றொரு விமர்சன குறிப்பை, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமான இவர், தனது குறிப்பில், '23.-7.-2021 ஆடி வெள்ளிக்கிழமை அன்று, துணை வேந்தர் தன் அலுவலகத்திற்கு, பெண் பேராசிரியர்களை வரவழைத்து பூசை செய்துள்ளார்.
சென்னை பல்கலை, நாகநாதன்,

சென்னை பல்கலையின், பொருளாதாரத் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மு.நாகநாதன், 'சென்னை பல்கலையா; சங்கர் பாபா கல்விக் கழகமா?' என்றொரு விமர்சன குறிப்பை, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமான இவர், தனது குறிப்பில், '23.-7.-2021 ஆடி வெள்ளிக்கிழமை அன்று, துணை வேந்தர் தன் அலுவலகத்திற்கு, பெண் பேராசிரியர்களை வரவழைத்து பூசை செய்துள்ளார். அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்ற, உயரிய குறிக்கோளைச் சிதைத்துள்ளார்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.


துணை வேந்தர் இப்படி நடந்துகொண்டது சரியா என்பதைப் பற்றி, சென்னை பல்கலையின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆயுத பூஜை, சரவஸ்வதி பூஜை, பல்கலையின், ஒவ்வொரு துறையிலும் விமரிசையாக நடைபெறும். துணை வேந்தர், ஒவ்வொரு துறையில் நடைபெறும் பூஜைக்கும் போய் விட்டு, தன் அலுவலக பூஜையிலும் பங்கு கொள்வார்.சாமி கும்பிடு என்றோ, கும்பிடாதே என்றோ, எங்கே பல்கலை சட்டம் சொல்கிறது? துணை வேந்தருக்கு அந்த உரிமை கூட கிடையாதா என்ன?நாகநாதன், துணை வேந்தர் சாமி கும்பிடுவதைப் பற்றிப் பேசுவதை விட, வேறு எத்தனையோ முக்கியமான விஷயங்களை எடுத்துப் பேசியிருக்கலாம்.


latest tamil news
உதாரணமாக, சென்னை பல்கலை தற்போது நிதிச் சுமையில் திணறுகிறது. இரண்டு ஆண்டுகளாக பல்கலைக்கு, கல்லுாரிகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாய் நின்று விட்டது. இணைப்பு கல்லூரிகள் தங்கள் பங்களிப்பை, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பல்கலையில் இருந்து திரும்ப பெற்று விட்டன. மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது நின்று, பல்கலைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலை, 'கார்பஸ்' வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் குறைந்து, வருவாய் பாதியாகி விட்டது.

பல்கலை மானிய குழு, அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் பல நிதி நிறுவனங்களிடம் இருந்து, பெறப்பட வேண்டிய நிதி நின்று போய் விட்டது.தொலைதுார கல்வி நிறுவனம் வழியாக வந்த வருமானமும் நின்று விட்டது. இந்த இழப்புகளை சரிசெய்ய ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக, அரசு அளித்திருக்க வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில் துணை வேந்தர்கள், பல்கலை நிதி வருவாயை பெருக்கத் தவறி விட்டனர்.

மத்திய பல்கலையாக, சென்னை பல்கலையை மாற்ற நடந்த முயற்சிகள் கைவிடப்பட்டு விட்டன. இந்தியாவின், முதன்மை பல்கலைக்களில் ஒன்றான, சென்னை பல்கலை, உலக அளவில் பெயர் பெற்றது. இதை மத்திய பல்கலையாக மாற்றினால், உலக தரம் வாய்ந்ததாக மாற, பெருமளவு வாய்ப்புண்டு.

ஆசிரியர்கள் பற்றாக்குறை, நிர்வாகப் பணியாளர்கள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என, பல வழிகளில், சென்னைப் பல்கலை திணறுகிறது. 222 ஆசிரியர்களுக்கும், 528 அலுவலர்களுக்கும் மாதம்தோறும் வழங்கப்பட வேண்டிய, 8.15 கோடி ரூபாய் ஊதியமே கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.கடந்த, 2018 மார்ச் 1 முதல், ஓய்வுபெற்ற, 150 ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கு, ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாதது, பல்கலை வரலாற்றில், இதுவரை நடந்தது இல்லை.

மேலும், 300 ஆசிரியர்கள், 712 நிர்வாகப் பணியாளர்கள், 439 குடும்ப ஓய்வூதியர்களுக்கு, மாத ஓய்வூதியம், 5.23 கோடி ரூபாயை வழங்குவதிலும் சிரமம் இருக்கிறது.அதிலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூட, பணப் பயன்கள் வழங்க முடியாத சூழலில் தான், சென்னை பல்கலை இருக்கிறது.இதையெல்லாம், நாகநாதன் எடுத்துப் பேசியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, சாமி கும்பிடுவது பற்றி வீணாகப் பேசியுள்ளார்.இவ்வாறு, அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.


மத பாகுபாடு கிடையாது!சென்னை பல்கலை வளாகத்தில் நடந்த, ஆடி வெள்ளி வழிபாடு குறித்து, துணை வேந்தர் கவுரி கூறியதாவது: பொதுவாக, எந்த மதமாக இருந்தாலும், அதற்கான பண்டிகை நாட்கள் வரும் போது, சென்னை பல்கலை ஊழியர்கள், பேராசிரியர்கள் சேர்ந்து, சிறிய நிகழ்ச்சி நடத்தி வழிபாடு செய்வதை, வழக்கமாக வைத்துள்ளனர். முந்தைய ஆண்டுகளை போல இந்த முறையும், ஆடி வெள்ளியன்று, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.அதற்கு துணை வேந்தர் என்ற முறையில் அழைத்தனர். பங்கேற்று, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகையானாலும், ஈத் பண்டிகையானாலும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்போம். மற்றபடி பல்கலையில், எந்த மொழி, இன, மத பாகுபாடும் கிடையாது. அனைவரும் சகோதரர்களாகவே பழகி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
30-ஜூலை-202119:52:42 IST Report Abuse
sridhar ஹிந்து சாமி மட்டும் கிடையாது என்ற பகுத்தறிவு எங்களுக்கு வேண்டாம் . நீயும் உன் எஜமானாரும் வைத்துக்கொள்ளுங்கள் .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூலை-202119:45:06 IST Report Abuse
Girija ரெண்டு ஏக்கர் ஐடியா தந்த ஆசாமி
Rate this:
Cancel
30-ஜூலை-202119:31:38 IST Report Abuse
அப்புசாமி எல்லா மத பண்டிகைகளையும் கொண்டாடுவதை விட, ஒரு பண்டிகையையும் கொண்டாடாமல் இருப்பதே உண்மையான மதச்சார்பின்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X