விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கோணிப்பைகளில் கட்டி சக்லேஷ்பூர் - பேகூர் சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க

பெங்களூரு: கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கோணிப்பைகளில் கட்டி சக்லேஷ்பூர் - பேகூர் சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.



latest tamil news



தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. 14 குரங்குகளையும் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். எஞ்சிய 46 குரங்குகள் உயிரிழந்தன. இதுகுறித்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news



சமூக ஊடகங்களில் இதுகுறித்த படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, 'விலங்குகள் மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது' என, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
30-ஜூலை-202121:03:21 IST Report Abuse
Balamurali Srinivasan வைப்பவர்கள் யார் என்று விசாரித்தால் தெரியவரும். எந்த அன்பு இல்லாத மனிதன் இதன் பின்னல் இருக்கிறான் என்று
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
30-ஜூலை-202119:42:01 IST Report Abuse
Desi கண்ணீர் வருகிறது
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
30-ஜூலை-202119:34:48 IST Report Abuse
Ram அரசு விவசாய நிலத்தை தும்சம்பண்ணு விலங்குகளை கட்டுப்படுத்தவில்லையென்றால் இதுதான் நடக்கும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X