மொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டது குறித்த விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் பலரது மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துஉள்ளது. இது தொடர்பாக பணியில் உள்ள அல்லது ஓய்வு
பெகாசஸ், மொபைல்போன், பத்திரிகையாளர்கள், உச்சநீதிமன்றம், கபில் சிபல், தலைமை நீதிபதி, ரமணா,

புதுடில்லி: 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டது குறித்த விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் பலரது மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துஉள்ளது. இது தொடர்பாக பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி பிரபல பத்திரிகையாளர்கள் என்.ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரமணா முன்பு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரது மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதனால், மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


latest tamil news




அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், பணிச்சுமையை பொறுத்து, அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-202113:23:13 IST Report Abuse
Janarthanan இந்த வழக்கை தொடந்த வைத்த ஆளை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது இது இந்தியாவின் பெயரை கெடுக்க வெஸ்டர்ன் மீடியா கூட்டத்தின் டூல் கிட் என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X