ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதி நாளையுடன் முறைவடையும் நிலையில், உற்பத்தி இன்றே நிறுத்தப்பட்டு உள்ளது.இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள
Sterlite, Tamilnadu, Oxygen, ஸ்டெர்லைட், தமிழக அரசு, ஆக்சிஜன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதி நாளையுடன் முறைவடையும் நிலையில், உற்பத்தி இன்றே நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது.


latest tamil news


ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத அனுமதி நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. கோவிட் தொற்று இன்னும் முழுமையாக குறையாத நிலையில், 3வது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க தேவையில்லை'' எனக் கூறினார்.




நிறுத்தம்


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதி நாளையுடன் முறைவடையும் நிலையில், உற்பத்தி இன்றே நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவை தொடர்ந்து இயக்கும் நிலையில் வைத்திருக்க தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஜூலை-202123:00:40 IST Report Abuse
Mohan ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி போராடியதால் தான் 13 பேர் இறந்தனர். ஆக்சிஜனுக்காக மீண்டும் திறந்ததால்,13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்திருப்பார்கள் .
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
30-ஜூலை-202119:46:41 IST Report Abuse
Nagercoil Suresh கொல்லப்பட்ட அந்த ஊர் அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடையட்டும்...
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
30-ஜூலை-202119:31:01 IST Report Abuse
RaajaRaja Cholan தூத்துக்குடி எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் பலர் எதிர்க்கவில்லை, எதை பண்ணினாலும் எதிர்க்கும், காசுக்காக, மதத்துக்காக எதிர்க்கும் கோட்டம் ஒன்று உண்டு, இவனுங்களுக்கு ஸ்டெர்லிட் ஒன்னுதான் இந்தியாவிலேயே மோசம், மற்ற எல்லாம் அபாரம, இந்த தமிழன் என்று சொல்லும் போலி திருட்டு திராவிடன், இவனுங்க பெரும்பாலும் இந்து மதத்தை மற்றும் எதிர்க்கும் மாற்று மதத்தை சேர்ந்த ஒரு சில போலி பாமபுகள். இந்த பாம்புகளுக்கு எப்பொழுது விசஹ் பல் எடுக்கப்டுகிறதோ அப்பொழுது நாடு சுபிட்சம் அடையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X