கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய அரசு வாதம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
மதுரை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ‛இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதிட்டார்.திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி
Srilankan Refuges, Citizenship, Central Govt, Court, இலங்கை அகதிகள், குடியுரிமை, மத்திய அரசு

மதுரை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ‛இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதிட்டார்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத்தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், ஆகையால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்றும் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி பற்றிய விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.


latest tamil news



ஆனால், அதிகாரிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாக்கல் மீதான விசாரணை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, "இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது," என மத்திய அரசு வாதம் செய்துள்ளது.

அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, "தனி நீதிபதியின் உத்தரவில் மனுவை பரிசீலிக்குமாறே உத்தரவிட்டுள்ளார். மனுவை பரிசீலித்து, குடியுரிமை வழங்குங்கள் அல்லது நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்?" எனக் கேள்வியெழுப்பினார். இதனைதொடர்ந்து திருச்சி கொட்டப்பட்டு முகாம் அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம்," என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், "தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும்" எனக்கூறி ஆக.,23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூலை-202122:58:41 IST Report Abuse
Pugazh V சட்ட மன்ற தேர்தலுக்கு முன் பாஜக வாசகர்கள் திடீரென இலங்கை தமிழர்களை "தொப்புள்கொடி உறவுகள்" என்ற புதுவார்த்தையில் எழுதினார்களே... ஓட்டு அரசியல் பண்ணினார்கள். இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்??
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-ஜூலை-202121:10:11 IST Report Abuse
RajanRajan எப்போ திராவிட கட்டுமர பாணி மெரினா உண்ணா விரத போராட்டம் துவங்குவாங்களோ.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
30-ஜூலை-202120:15:48 IST Report Abuse
GANESUN அதுதான் கேள்வி பல வருஷங்களாக கான்கிராஸும் தியமுகவும் ஏன் முடிவெடுக்வில்லை. அப்போதெல்லாம் இந்த வைகோ போன்ற குடுகுடுப்பைகாரனுங்க ஏன் ஊமையாய் இருந்தாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X