கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: மாற்று எரிசக்திக்காக இயற்கை வளங்கள், நீர்நிலைகள், சாலைகளை ஆக்கிரமிக்ககக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சாலைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் காற்றாலைகளை அமைத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள்
நீர்நிலைகள், சாலைகள், மாற்று எரிசக்தி, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், சென்னை ஐகோர்ட்,

சென்னை: மாற்று எரிசக்திக்காக இயற்கை வளங்கள், நீர்நிலைகள், சாலைகளை ஆக்கிரமிக்ககக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சாலைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் காற்றாலைகளை அமைத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது, காற்றாலை நிறுவனம், ஈரோடு பகுதியில் காற்றாலை மூலம 300 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் அனுமதி பெற்று இதுவரை 125 காற்றாலைகளுக்கான கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளது. வழக்குகளால், காலக்கெடுவுக்குள் காற்றாலைகளை அமைக்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக கூறியது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், மாற்று எரிசக்திக்காக இயற்கை வளங்கள், நீர்நிலைகள், சாலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது எனக்கூறியதுடன், வழக்கு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் காற்றாலை நிறுவனம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஜூலை-202122:47:42 IST Report Abuse
Mohan அவிங்களும் கேக்க மாட்டாய்ங்க, நீங்களும் பாக்கமாட்டீங்க. பேசாம இதுக்கும் ஒரு குழு அமைச்சிடுங்க, கூலி கொடுக்கத்தான் வரி கட்டும் மக்கள் இருக்காங்களே.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூலை-202121:33:36 IST Report Abuse
Natarajan Ramanathan முதலில் வள்ளுவர் கோட்டத்தை இடித்து அகற்றிவிட்டு பிறகு ஞாயம் பேசுங்கள்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
30-ஜூலை-202120:13:52 IST Report Abuse
Priyan Vadanad தனி மனிதர் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை இப்போது அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X