பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல்போனில் டிவி சீரியல் பார்த்த படி பைக் ஓட்டிய நபர்!

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கோவை: மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டு பைக்கை ஓட்டிய நபர் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'டிவி' நாடகங்களுக்கு, பல பெண்கள் அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு நாடகங்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளன. பெண்களை தான் நாடகங்கள் ஆட்கொண்டுள்ளன என்றால், இன்று ஆண்கள் பலரும், இதற்கு அடிமையாகி உள்ளனர்.என்ன வேலை கிடந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு
Coimbatore, Bike, Serial, கோவை, சீரியல், பைக்

கோவை: மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டு பைக்கை ஓட்டிய நபர் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'டிவி' நாடகங்களுக்கு, பல பெண்கள் அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு நாடகங்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளன.

பெண்களை தான் நாடகங்கள் ஆட்கொண்டுள்ளன என்றால், இன்று ஆண்கள் பலரும், இதற்கு அடிமையாகி உள்ளனர்.என்ன வேலை கிடந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு 'டிவி' க்களின் முன் அமர்ந்து விடுகின்றனர். ஆனால், இதை எல்லாம் மிஞ்சும் வகையில், கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. காந்திபுரம் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த, நடுத்தர வயது நபர் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த 'ஸ்டாண்டில்' இருந்த மொபைல் போனில், 'டிவி' சீரியல் ஒன்றை பார்த்தபடி சென்றார்.


latest tamil newsபின்னால் பைக்கில் வந்த நபர், இதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார். அதை அப்படியே மொபைல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. போலீசார் அந்த 'டிவி' சீரியல் பார்த்த தீவிர ரசிகரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பைக்கை ஓட்டிய நபர் கோவையை சேர்ந்த முத்துசாமி எனத் தெரிந்தது. அவரை பிடித்த போலீசார், அபாயகரமாக வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாதது மற்றும் வாகனம் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்தியதற்காக, ரூ.1,200 அபராதம் விதித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202109:14:02 IST Report Abuse
Prakash Krishnamurthi இந்த ஜென்மம் பேருந்தோ லாரியோ இடித்து தள்ளி போய் சேர்ந்தாலும் தப்பில்லை வீடியோ எடுத்தவர் அந்த வண்டி ஓட்டியின் வண்டி நம்பரையும் வீடியோ எடுத்திருக்க வேண்டும்...
Rate this:
Cancel
RanganathanS - Neyveli,இந்தியா
31-ஜூலை-202104:39:32 IST Report Abuse
RanganathanS உடனே கைது செய்ய வேண்டும். ‌தன் தவறை உணர வைக்கவேண்டும். இல்லையெனில் பலர் இதுபோன்ற மற்றும் இதற்கு மேலும் தவறுகள் செய்யும் நிலை ஏற்படும். கலிகாலத்தில் நல்லதை விட கெட்டது வேகமாக மக்கள் மனதில் பதியும்.நம் மக்களில் பெரும்பாலோர் விளம்பர பிரியர்கள். உடன் நடவடிக்கை எடுக்க தவறினால் இது போன்ற காட்சி டிவி சீரியல் மற்றும் சினிமாக்களை ஆக்ரமித்து பல பேர் இந்த தவறு செய்ய நேரிடும்.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - Ameerpet srnagar Hyderabad,இந்தியா
31-ஜூலை-202102:55:03 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இப்படி தவறு பண்ணும் இவன் வேறு வண்டி மீது மோதினால் பழியை அந்த வண்டி மீது போட்டுவிடும் குணம் இந்த மாபியா டிவி களால் வளர்துவுடபட்டுள்ளது மாபியா டிவி ஒழிந்தால் நாடு செழிக்கும் உலக தொல்லை காட்சிகளில் mudhanmuraiyaaga நம்ம மக்கள் பாய்காட் பண்ணுவாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X