மொபைல்போனில் டிவி சீரியல் பார்த்த படி பைக் ஓட்டிய நபர்! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல்போனில் டிவி சீரியல் பார்த்த படி பைக் ஓட்டிய நபர்!

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (18)
Share
கோவை: மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டு பைக்கை ஓட்டிய நபர் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'டிவி' நாடகங்களுக்கு, பல பெண்கள் அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு நாடகங்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளன. பெண்களை தான் நாடகங்கள் ஆட்கொண்டுள்ளன என்றால், இன்று ஆண்கள் பலரும், இதற்கு அடிமையாகி உள்ளனர்.என்ன வேலை கிடந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு
Coimbatore, Bike, Serial, கோவை, சீரியல், பைக்

கோவை: மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டு பைக்கை ஓட்டிய நபர் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'டிவி' நாடகங்களுக்கு, பல பெண்கள் அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு நாடகங்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளன.

பெண்களை தான் நாடகங்கள் ஆட்கொண்டுள்ளன என்றால், இன்று ஆண்கள் பலரும், இதற்கு அடிமையாகி உள்ளனர்.என்ன வேலை கிடந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு 'டிவி' க்களின் முன் அமர்ந்து விடுகின்றனர். ஆனால், இதை எல்லாம் மிஞ்சும் வகையில், கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. காந்திபுரம் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த, நடுத்தர வயது நபர் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த 'ஸ்டாண்டில்' இருந்த மொபைல் போனில், 'டிவி' சீரியல் ஒன்றை பார்த்தபடி சென்றார்.


latest tamil news



பின்னால் பைக்கில் வந்த நபர், இதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார். அதை அப்படியே மொபைல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. போலீசார் அந்த 'டிவி' சீரியல் பார்த்த தீவிர ரசிகரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பைக்கை ஓட்டிய நபர் கோவையை சேர்ந்த முத்துசாமி எனத் தெரிந்தது. அவரை பிடித்த போலீசார், அபாயகரமாக வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாதது மற்றும் வாகனம் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்தியதற்காக, ரூ.1,200 அபராதம் விதித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X