முதுகலை ஆசிரியருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரிக்கை

Added : ஜூலை 30, 2021
Share
நாமக்கல்: நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கென கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடர்ந்து, காலியாக உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூத்த

நாமக்கல்: நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கென கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடர்ந்து, காலியாக உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியருக்கான பதவி உயர்வை கலந்தாய்வு மூலமாக நடத்த வேண்டும். அதன் பின் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்மாவட்ட மற்றும் வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை அளிக்கும் வகையிலான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். கலந்தாய்வில், தற்போது பின்பற்றப்படும் மூன்றாண்டுகள் என்பதை மாற்றி, பழைய முறைப்படி, அதாவது ஓராண்டு ஒரு பள்ளியில் பணியாற்றி இருந்தாலே போதும் என்ற அளவில் ஆசிரியர்களை பங்கு பெற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X