பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கு விரைவில் தேர்தல்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தலா, ஒன்று, ஊராட்சி தலைவர் 5, வார்டு உறுப்பினர், 17 என, மொத்தம், 24 காலி பதவிகளுக்கு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல், 2019, டிச., 27, 30 என, இரண்டு கட்டங்களாக நடந்தது. அதையடுத்து, 2020, ஜன., 2ல், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சி, 322 கிராம ஊராட்சிகள் உள்ளன.

நாமக்கல்: மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தலா, ஒன்று, ஊராட்சி தலைவர் 5, வார்டு உறுப்பினர், 17 என, மொத்தம், 24 காலி பதவிகளுக்கு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.


தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல், 2019, டிச., 27, 30 என, இரண்டு கட்டங்களாக நடந்தது. அதையடுத்து, 2020, ஜன., 2ல், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சி, 322 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில், நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து, 322 கிராம ஊராட்சி, 17 மாவட்ட கவுன்சிலர், 15 ஒன்றியங்களில் உள்ள, கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. அதில், வெண்ணந்தூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலராக இருந்த சுந்தரம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த இடம் காலியாக உள்ளது. எருமப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வருதராஜ் இறந்ததையடுத்து, அந்த பதவியும் காலியாக உள்ளது. மேலும், கபிலர்மலை ஒன்றியம், கோப்பணம்பாளையம் ஊராட்சி தலைவர் சேகர், சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற்றார். அதையடுத்து, அந்த பதவி காலியாக உள்ளது. ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பழனிசாமி, திம்மநாயக்கன்பட்டி ராமசாமி, கூடச்சேரி சுப்ரமணியம், நடுக்கோம்பை அழகப்பன் ஆகியோர், விபத்து, கொரோனா மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால், அந்த பதவிகள் காலியாக உள்ளன. அதேபோல், கிராம ஊராட்சிகளில், 16 வார்டு பதவிகள், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெரப்பஞ்சோலை ஊராட்சியில், ஒரு வார்டுக்கு தேர்தல் நடக்கவில்லை. அதையும் சேர்த்து, 17 இடங்கள் காலியாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்று, ஒன்றிய கவுன்சிலர், ஒன்று, ஊராட்சி தலைவர் ஐந்து, வார்டு உறுப்பினர், 17 என, மொத்தம், 24 பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X