பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்லாமிய பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில் இஸ்லாமிய பெண்கள் மூன்று பேருக்கு, இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நாமக்கல் ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் அப்பெண்களுக்கு நகை, சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி, பீரோ, கட்டில் ஆகியவை சீதனமாக வழங்கப்படுகிறது.

நாமக்கல்: நாமக்கல்லில் இஸ்லாமிய பெண்கள் மூன்று பேருக்கு, இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நாமக்கல் ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் அப்பெண்களுக்கு நகை, சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி, பீரோ, கட்டில் ஆகியவை சீதனமாக வழங்கப்படுகிறது. நான்காவது ஆண்டாக நேற்று, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அஞ்சுமனே இஸ்லாமிய பேட்டை பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற விழாவில், மூன்று ஜோடிகளுக்கு திருமணத்தை, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் நடத்தி வைத்தார். நற்பணி மன்ற நிர்வாகிகள், திருமண ஜோடிகளின் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X