பொது செய்தி

தமிழ்நாடு

கல்வியறிவு சிறப்பு பயிற்சி மதிப்பீட்டு முகாம் துவக்கம்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் நகர மற்றும் கிராமப்புறங்களில் கல்வியறிவு சிறப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு மதிப்பீட்டு முகாம் நேற்று துவங்கியது. நாடு முழுவதும், 100 சதவீத கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு, 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர, கிராமப்புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாதோரை கண்டறிந்து, படித்த தன்னார்வலர்கள் மூலம், 6 மாத கால

நாமக்கல்: நாமக்கல் நகர மற்றும் கிராமப்புறங்களில் கல்வியறிவு சிறப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு மதிப்பீட்டு முகாம் நேற்று துவங்கியது. நாடு முழுவதும், 100 சதவீத கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு, 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர, கிராமப்புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாதோரை கண்டறிந்து, படித்த தன்னார்வலர்கள் மூலம், 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஓரளவு எழுதுவது, படிப்பது, கணக்கிடுவது போன்றவற்றை முதியோர் மேற்கொள்வர். அவர்கள் தகுதி பெற்றுள்ளனரா என்பதை கண்டறியும் வகையில், மதிப்பீட்டு முகாம் எனும் தேர்வு நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வு நாமக்கல் மாவட்டத்தில், 400 மையங்களில் நடந்தது. 9,000 பேர் தேர்வை எதிர் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X