லாட்டரி சீட்டு விற்றவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Added : ஜூலை 30, 2021
Share
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார். குமாரபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ.,க்கள் மலர்விழி, மாதையன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் பிரிவு பகுதியில், அங்குள்ள பால் கடை அருகே ஒருவர் போலி லாட்டரி சீட்டு விற்பது

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார். குமாரபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ.,க்கள் மலர்விழி, மாதையன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் பிரிவு பகுதியில், அங்குள்ள பால் கடை அருகே ஒருவர் போலி லாட்டரி சீட்டு விற்பது தெரிந்தது. விசாரணையில், அவரது பெயர் சிவகுமார், 47 என்பதும், அம்மன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X