பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளியில் செம்பேன் தாக்குதல்: ரூ.50 கோடி இழப்பு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மரவள்ளிக்கிழங்கு பயிரில் கள்ளிப்பூச்சி, செம்பேன் தாக்குதலால், 50 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட பா.ஜ., விவசாய அணி பொறுப்பாளர் கோனூர் சீனிவாசன் கூறியதாவது: மாவட்டம் முழுவதும், 5,000 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். நடப்பாண்டு கள்ளிப்பூச்சி,

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மரவள்ளிக்கிழங்கு பயிரில் கள்ளிப்பூச்சி, செம்பேன் தாக்குதலால், 50 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட பா.ஜ., விவசாய அணி பொறுப்பாளர் கோனூர் சீனிவாசன் கூறியதாவது: மாவட்டம் முழுவதும், 5,000 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். நடப்பாண்டு கள்ளிப்பூச்சி, செம்பேன் என்ற வைரஸ் தொற்று பரவி பயிரைத் தாக்கி முற்றிலுமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதனால், 100 ஏக்கர் பயிருக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தோலூர், புதுப்பாளையம் பகுதியில் மட்டும், 300 ஏக்கர் பயிரில், 3 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், 50 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X