பொது செய்தி

தமிழ்நாடு

முதல்போக சாகுபடிக்கு கெலவரப்பள்ளி அணை திறப்பு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மற்றும் ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், நேற்று தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினர். பின்னர், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கூறுகையில், ''தண்ணீர் திறப்பால், 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடையும். இதில், 135 நாட்களுக்கு சுழற்சி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மற்றும் ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், நேற்று தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினர். பின்னர், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கூறுகையில், ''தண்ணீர் திறப்பால், 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடையும். இதில், 135 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், அடுத்த, ஐந்து நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், ஒன்பது நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். அணையிலிருந்து மொத்தம், 88 கன அடி திறந்து விடப்படும்,'' என்றார். நேற்று அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 44.28 அடியில், 41 அடியாக இருந்தது. நிகழ்ச்சியில், ஓசூர், சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X