பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல்கலாம் நினைவு தினம் மரக்கன்றுகள் நடும்விழா

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனூர் காலனியில் டாக்டர் அப்துல்கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 1,600 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தோகைமலை ஒன்றிய அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக நடந்த விழாவிற்கு, நாகனூர் பஞ்., தலைவர் லதா ராஜா தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனூர் காலனியில் டாக்டர் அப்துல்கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 1,600 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தோகைமலை ஒன்றிய அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக நடந்த விழாவிற்கு, நாகனூர் பஞ்., தலைவர் லதா ராஜா தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பொது இடங்கள், கோவில் வளாகங்களில், 1,600 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து அப்துல்கலாம் குறித்து கல்லூரி, பள்ளி மாணவ மாணவியரிடையே பேச்சு போட்டி, வினாடிவினா, கட்டுரை, ஓவிய போட்டி, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, 150 நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நேரு யுவகேந்திரா ஆலோசனை குழு உறுப்பினர் செல்வம், அம்பேத்கர் நற்பணி மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X