அரசியல் செய்தி

தமிழ்நாடு

தற்போதைய தளர்வுகளுடன் ஆக.9 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை (ஜூலை 31)காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.இந்நிலையில், ஊரடங்கு
தளர்வுகள் ஆக.9 , ஊரடங்கு நீட்டிப்பு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை : தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை (ஜூலை 31)காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அறிவிப்பு, கொரோனா நோயை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



latest tamil news


கூட்டத்திற்கு பின் முதல்வர் பிறப்பித்த உத்தரவு வருமாறு

தொற்று நிலையை கட்டுப்படுத்த வேண்டி இருப்பதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும்,ஆக. 9-ம் தேதி காலை, 6:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

* தற்போதைய தளர்வுகளே ஆக.9 வரை தொடர்ந்து நீட்டிக்கும். இதில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

* கூடுதலாக வேறு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.

* அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால் குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம்.

*விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது ஆகியவற்றை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது..இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202111:57:05 IST Report Abuse
Aruna இனி கணேஷ் சதுர்த்தி முதல பண்டிகை வரப் போகிறது. இப்போதே Advance ஊரடங்கா? சமீபத்தில் ஒரு கூட்டத்தில் அமச்சர்களே முக கவசம் இன்றி கலந்து கொண்டனர்.
Rate this:
Cancel
Kaman Kadhar Karthar - Chennai,இந்தியா
31-ஜூலை-202111:15:54 IST Report Abuse
Kaman Kadhar Karthar ஆட்சிக்கு வரும் முன்னர் சொன்னது ஒன்னு இப்ப பண்ணுறது ஒன்னு. மாநிலம் லாக் டௌனை தாங்காது என்றவர் இப்போது செய்வது நேர்மாறாக உள்ளது.
Rate this:
Cancel
s.மாடசாமி, சிளுக்குவாற்பட்டு ஊரடங்கு தற்போதும் நமது மாநிலத்தில் உள்ளதா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X