சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலையில் சந்தேகம்; உறவினர்கள் மறியல் போராட்டம்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், கடவூர் அருகில் சுருமான்பட்டியை சேர்ந்தவர் ராசாத்தி, 24. இவருக்கும், கணேஷ்குமார் என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில், கணேஷ்குமார் தாயின் மருத்துவ

கரூர்: பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்டம், கடவூர் அருகில் சுருமான்பட்டியை சேர்ந்தவர் ராசாத்தி, 24. இவருக்கும், கணேஷ்குமார் என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில், கணேஷ்குமார் தாயின் மருத்துவ செலவுக்கு, ராசாத்தியின் தங்க சங்கலியை கேட்டிருந்தார். இதனால், இரண்டு பேருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக, நேற்று முன்தினம் ராசாத்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, ராசாத்தியின் உறவினர்கள் நேற்று மதியம், 1:30 மணிக்கு கரூர் காந்திகிராமம் திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையில் போலீசார், பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராசாத்தியின் கணவர் கணேஷ்குமார், மாமனார் முத்தையா ஆகியோரை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X