சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபர் விலை மொபைல் போன்; ரூ.15,500 இழந்த வாலிபர்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: ஆபர் விலையில் மொபைல் போன் என்ற மோசடி விளம்பரத்தை நம்பி, 15 ஆயிரத்து, 500 ரூபாயை வாலிபர் இழந்துள்ளார். கரூர், வெங்கமேடு புதுவசந்தம் நகரை சேர்ந்தவர் தனசேகரன், 43. இவர், சமூக வலை தளத்தில், சிறப்பு சலுகை விலையில் மொபைல் போன் விற்பனை செய்வதாக விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, 20 ஆயிரம் ரூபாய் விலையுள்ள

கரூர்: ஆபர் விலையில் மொபைல் போன் என்ற மோசடி விளம்பரத்தை நம்பி, 15 ஆயிரத்து, 500 ரூபாயை வாலிபர் இழந்துள்ளார். கரூர், வெங்கமேடு புதுவசந்தம் நகரை சேர்ந்தவர் தனசேகரன், 43. இவர், சமூக வலை தளத்தில், சிறப்பு சலுகை விலையில் மொபைல் போன் விற்பனை செய்வதாக விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, 20 ஆயிரம் ரூபாய் விலையுள்ள சாம்சங் ஏ52 மொபைல் போனை, 15 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அதை நம்பி மோசடி நபர் கூறிய வங்கி கணக்கில், 15 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், மொபைல் அனுப்பாமல் ஏமாற்றி விட்டார். இதையடுத்து, தனசேகரன் அளித்த புகார்படி, கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X