சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மூன்றாவது திருமணம்: மனைவி புகார்படி இருவர் கைது

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: கணவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக, முதல் மனைவி அளித்த புகார்படி, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஜோதிமுருகேஸ்வரி, 30. கரூர் வெங்கமேடு அம்மன் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர்களுக்கு, 2012ல் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். கடந்த, 2015 முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்

கரூர்: கணவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக, முதல் மனைவி அளித்த புகார்படி, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஜோதிமுருகேஸ்வரி, 30. கரூர் வெங்கமேடு அம்மன் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர்களுக்கு, 2012ல் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். கடந்த, 2015 முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு வராத நிலையில், நித்தியா என்பவரை பாலசுப்பிரமணியன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, மூன்றாவதாக சுதா என்ற பெண்ணையும் திருமணம் செய்து உள்ளார். இது தொடர்பாக முதல் மனைவி ஜோதிமுருகேஸ்வரி, கரூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, பாலசுப்பிரமணியன், அவரது தந்தை ராமசாமி, தாய் தெய்வநாயகி, பாலசுப்பிரமணியன் இரண்டாவது மனைவி நித்தியா உட்பட, ஐந்து பேர் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியன், இரண்டாவது மனைவி நித்யா ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X