பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடு புகார் எதிரொலி: 17 ஊராட்சி செயலாளர்கள் மாற்றம்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: முறைகேடு புகார் எதிரொலியாக, 17 ஊராட்சி செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று முன்தினம் வேலூரில் அளித்த பேட்டியில், 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், அக்ராகரம்

திருப்பத்தூர்: முறைகேடு புகார் எதிரொலியாக, 17 ஊராட்சி செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.


ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று முன்தினம் வேலூரில் அளித்த பேட்டியில், 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், அக்ராகரம் ஊராட்சி உள்பட, 17 செயலாளர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக அக்ராகரம் செயலாளர் பூபதி என்பவர் மீது, 100 நாள் வேலை திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம் போன்றவற்றில் முறைகேடுகள் செய்து, மூன்று கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து, 17 செயலாளர்களையும் பணியிட மாற்றம் செய்து, ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் நேற்று உத்தரவிட்டார். அதன்படி அக்ராகரம், சின்ன வேப்பம்பட்டு, சின்னகல்லுபள்ளி, சின்ன கம்மியம்பட்டு, சின்னமூக்கனூர், தாமலேரிமுத்தூர், ஏலகிரி, கோணாப்பட்டு, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், மூக்கனூர், பெரிய கம்மியம்பட்டு, புத்தகரம், ரெட்டியூர், கலந்திரா, செட்டியப்பனூர், பணியாண்டபள்ளி ஆகிய ஊராட்சி செயலாளர்கள் ஒன்றியத்திற்குள் மாற்றப்பட்டனர். இதில் அக்ராகரம் செயலாளர் பூபதி, கலந்திராவுக்கு மாற்றப்பட்டார். 17 ஊராட்சி செயலாளர்கள் மீது வந்துள்ள புகார்கள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X