பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி திட்டப்பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து: பெரியகருப்பன்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: ''குடிநீர், சாலை வசதி போன்ற வளர்ச்சி திட்டப்பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்காவிட்டால், அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்து வேறு ஒருவருக்கு வழங்கப்படும்,'' என, அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூடம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்

திருப்பத்தூர்: ''குடிநீர், சாலை வசதி போன்ற வளர்ச்சி திட்டப்பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்காவிட்டால், அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்து வேறு ஒருவருக்கு வழங்கப்படும்,'' என, அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூடம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால், 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையை முதல்வர் ஸ்டாலின் மாற்றி, 1,500 ஆக குறைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்ற வளர்ச்சித் திட்டப்பணிகளில், சில பணிகள் ஆரம்பிக்கப்படாமலும், சில பணிகள் நிலுவையிலும் உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் இந்தாண்டுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்பட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு ஒருவருக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X