மொபைல்போனில் நாடகம் பார்த்த படி பைக் ஓட்டிய நபர் * சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போனில் நாடகம் பார்த்த படி பைக் ஓட்டிய நபர் * சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021
Share
கோவை:மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டு பைக்கை ஓட்டிய நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.'டிவி' க்களில் ஒளிப்பரப்பாகும், நாடகங்களுக்கு பல பெண்கள் அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு நாடகங்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளன. பெண்களை தான் நாடகங்கள் ஆட்கொண்டுள்ளன என்றால் இன்று ஆண்கள் பலரும் இதற்கு அடிமையாகி உள்ளனர். என்ன வேலை கிடந்தாலும்,

கோவை:மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்துக் கொண்டு பைக்கை ஓட்டிய நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



latest tamil news


'டிவி' க்களில் ஒளிப்பரப்பாகும், நாடகங்களுக்கு பல பெண்கள் அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு நாடகங்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளன. பெண்களை தான் நாடகங்கள் ஆட்கொண்டுள்ளன என்றால் இன்று ஆண்கள் பலரும் இதற்கு அடிமையாகி உள்ளனர். என்ன வேலை கிடந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு 'டிவி' க்களின் முன் அமர்ந்து விடுகின்றனர். ஆனால், இதை எல்லாம் மிஞ்சும் வகையில் கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவைகாந்திபுரம் மேம்பாலத்தில் பரபரப்பு எப்போதும் குறைவிருக்காது. வாகனங்கள் அசுர வேகத்தில் பறந்து கொண்டு இருக்கும். இந்நிலையில், காந்திபுரம் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த நடுத்தர வயது நபர் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த 'ஸ்டாண்டில்' இருந்த மொபைல் போனில் எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டே சென்றார். பின்னால் பைக்கில் வந்த நபருக்கு அப்படி அவர் எதைப்பார்க்கிறார் என்ற ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து சற்று வேகத்தை அதிகரித்து சென்று பார்த்த போது அதிர்ச்சிக்குள்ளாகினார்.


latest tamil news


மொபைல்போனில் அந்த நபர் 'டிவி' யில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை பார்த்தது தான் அவரது அதிர்ச்சிக்கு காரணம். அதை அப்படியே மொபைல்போனில் வீடியோ எடுத்த பின்னால், வந்த வாகன ஓட்டி சமூக வலைதளத்திலும் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீசார் மொபைல்போனில் 'டிவி' சீரியல் பார்த்தபடி, பைக் ஓட்டிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X