பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
ஜூலை 31, 1980பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகருக்கு அருகேயுள்ள மஜிதா எனும் இடத்தில், 1924 டிச., 24ம் தேதி பிறந்தவர், முகமது ரபி. உஸ்தாத் படே குலாம் அலி கான், பண்டிட் ஜீவன்லால் போன்றோரிடம் இசை கற்றார்.கடந்த 1941-ல், முதன்முதலாக குல் பாலோச் என்ற பஞ்சாபி படத்தில் பின்னணி பாடினார். தொடர்ந்து ஹிந்தி, அசாமி, கொங்கணி, போஜ்புரி, ஒரியா, பஞ்சாபி, பெங்காலி உட்பட 14 இந்திய மொழிகளிலும்;

இதே நாளில் அன்று


ஜூலை 31, 1980



பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகருக்கு அருகேயுள்ள மஜிதா எனும் இடத்தில், 1924 டிச., 24ம் தேதி பிறந்தவர், முகமது ரபி. உஸ்தாத் படே குலாம் அலி கான், பண்டிட் ஜீவன்லால் போன்றோரிடம் இசை கற்றார்.கடந்த 1941-ல், முதன்முதலாக குல் பாலோச் என்ற பஞ்சாபி படத்தில் பின்னணி பாடினார்.

தொடர்ந்து ஹிந்தி, அசாமி, கொங்கணி, போஜ்புரி, ஒரியா, பஞ்சாபி, பெங்காலி உட்பட 14 இந்திய மொழிகளிலும்; ஆங்கிலம், பாரசீகம், ஸ்பானிஷ், டச் என பல அயல்நாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார். ஹிந்து கடவுள் ராமன் பற்றி, இவர் பாடிய பாடல்கள்

பிரசித்தமானவை.சாஸ்திரிய இசை, கஜல், கவாலி, பஜன் ஆகியவற்றிலும், பல்வேறு மொழி இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார். 1940 முதல்- 1980 வரையில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிஉள்ளார். 'தேசிய விருது, பத்மஸ்ரீ, பிலிம்பேர்' உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். 1980 ஜூலை 31ம் தேதி, தன் 56வது வயதில் காற்றில் கலந்தார்.பின்னணி பாடகர் முகமது ரபி காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X