பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு வார விடுமுறை: சைலேந்திர பாபு அறிவிப்பு

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை :'போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பதுடன், திருமணம், பிறந்த நாளிலும் விடுமுறை வழங்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., -- ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* போலீசார் தங்கள் உடல் நலனை பேணிக்காக்க ஏதுவாகவும், அவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் போதிய நேரத்தை
 போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை:


சென்னை :'போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பதுடன், திருமணம், பிறந்த நாளிலும் விடுமுறை வழங்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., -- ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* போலீசார் தங்கள் உடல் நலனை பேணிக்காக்க ஏதுவாகவும், அவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கும் வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும்
* வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கும், ஓய்வு தினத்தில், பணியில் இருக்கும் போலீசாருக்கும், மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
* போலீசாரின் பிறந்த நாள், திருமண நாட்களில், அவர்களின் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ, அந்த இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும்.


latest tamil news


* தமிழக காவல் துறையின் சார்பில், போலீசாரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி, மாவட்ட மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

* இந்த அறிவுரைகளை, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் தவறாமல் செயல்படுத்த வேண்டும்.

* இந்த சுற்றறிக்கை கிடைத்தது பற்றி, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manickavasagam S - namakkal ,இந்தியா
31-ஜூலை-202110:48:09 IST Report Abuse
Manickavasagam S நல்ல விஷயம் .... இது அவர்களுக்கு மனதளவில் சமநிலை அடைய உதவும். அவர்களும் மனிதர்கள் தான், மனிதர்களாக இருக்க இது உதவும் .....
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
31-ஜூலை-202108:17:42 IST Report Abuse
 Muruga Vel ராணுவ தளபதியா இருந்தார்னா ராணுவ வீரர்களுக்கும் வார விடுமுறை தருவார் ...
Rate this:
Cancel
Raj Sam - Yishun,சிங்கப்பூர்
31-ஜூலை-202107:30:38 IST Report Abuse
Raj Sam வெரி குட் டெஸிஸின் சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X