பொது செய்தி

தமிழ்நாடு

சிறைவாசிகளை நல்வழிப்படுத்த தொழில் முறை பயிற்சி அவசியம் டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி.,

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
வேலுார்:சிறைவாசகளை நல்வழிப்படுத்த, சிறைத்துறையினருக்கு தொழில் முறை பயிற்சி அவசியம் என வேலுாரில் நடந்த விழாவில், டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் கோயல் பேசினார்.வேலுார் மாவட்டம், வேலுார் தொரப்பாடியில், தென் மாநிலங்களுக்கான சிறை நிர்வாகம் பயிற்சி மையம் ஆப்கா உள்ளது. இங்கு சிறைத்துறை அலுவலர்கள், ஜெயலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா,
 சிறைவாசிகளை நல்வழிப்படுத்த தொழில் முறை பயிற்சி அவசியம் டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி.,

வேலுார்:சிறைவாசகளை நல்வழிப்படுத்த, சிறைத்துறையினருக்கு தொழில் முறை பயிற்சி அவசியம் என வேலுாரில் நடந்த விழாவில், டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் கோயல் பேசினார்.

வேலுார் மாவட்டம், வேலுார் தொரப்பாடியில், தென் மாநிலங்களுக்கான சிறை நிர்வாகம் பயிற்சி மையம் ஆப்கா உள்ளது. இங்கு சிறைத்துறை அலுவலர்கள், ஜெயலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி திகார் சிறை என 65 சிறைத்துறை அலுவலர்களுக்கு கடந்த எட்டு மாதமாக இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதில், சிறை நிர்வாகம், குற்றவியல், சமூகவியல், உளவியல், குற்றவியல் சட்டங்கள், சிறப்பு சட்டங்கள், மனித உரிமைகள், சிறை மேலாண்மை, இந்திய அரசியலமைப்பு, குற்றவியல் நீதி அமைப்பு, மேலாண்மை கோட்பாடுகள், சிறை நிர்வாக தொழில் நுட்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

மேலும் உடல் திறன் பயிற்சி, கூட்டத்தை கட்டுப்படுத்துதல், ஆயுதங்களை கையாள்வது குறித்த தொழிற் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடந்தது. ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை வகித்தார். டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் கோயல் பங்கேற்று பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்று, பதக்கம் வழங்கி பேசியதாவது:

சிறைத்துறை பணி கடினமானது. குற்றங்கள் செய்தவர்கள், கொடுங்குற்றவாளிகள், சமூதாயத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்த சிறைத்துறையினருக்கு தொழிற் முறை பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது.
டெல்லியில் இருந்து முதல் முறையாக, வேலுார் ஆப்காவில் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X