சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட மாநகராட்சி தடை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னையில் நாளை முதல் ஆக.,9 ம் தேதி வரையில் ஒன்பது இடங்களில் அங்காடிகள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:பக்கத்து மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தொற்று பாதிப்பு சிறிது அதிகரித்து காணப்படுகிறது. பெருநகரசென்னை மக்களின் வாழ்வாதாரம்

சென்னை: சென்னையில் நாளை முதல் ஆக.,9 ம் தேதி வரையில் ஒன்பது இடங்களில் அங்காடிகள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.latest tamil newsஇது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:பக்கத்து மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தொற்று பாதிப்பு சிறிது அதிகரித்து காணப்படுகிறது. பெருநகரசென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடைவிதிக்கப்படுகிறது. இதன்படி பொது மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் ஆக.,9ம் தேதி வரையில் அங்காடிகள் செயல்பட அனுமதி இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி திருவல்லிக்கேணி ஜாம்பஜார்பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை

புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்கலீன் சாலை வரை அங்காடிகள் செயல்பட தடை

வடக்கு உஸ்மான் ரோடுமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரையில் உள்ள கடைகள்

ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை

அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவி.க பூங்கா சந்திப்பு வரை

என்.எஸ்.கே போஸ் சாலையில் குறளகம் முதல் தங்கசாலை வரையில் உள்ள அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை


latest tamil newsரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை அங்காடிகள் செயல்பட தடை

கொத்தவால் சாவடி மார்க்கெட் ஞாயிறு (ஆக.,1ம் தேதி) முதல் செயல்பட அனுமதியில்லை இது குறித்து வணிகர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
31-ஜூலை-202116:36:31 IST Report Abuse
Rengaraj எல்லா ஊர்களிலும் இவ்வாறு மக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். குறிப்பாக மதுரையில் நிறைய வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்கும்போது கொரோனா பயம் மற்றும் பீதி மனதை விட்டு அகலவில்லை.
Rate this:
Cancel
P DINESH -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202107:29:16 IST Report Abuse
P DINESH Timely decision! Much required at this time!
Rate this:
Cancel
murali srinivasan - nadu,இந்தியா
31-ஜூலை-202106:07:37 IST Report Abuse
murali srinivasan பாராட்டுக்கள். சரியான முடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X